Shadow

Tag: இயக்குநர் மதுராஜ்

தொட்ரா விமர்சனம்

தொட்ரா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழ்நாட்டை உலுக்கிய இரண்டு சம்பவங்களை ஒன்றாக இணைத்து ஒரே படமாக எடுத்துள்ளதாக விளம்பரப் பதாகைகள் தெரிவிக்கின்றன. மேலும் ஆணவக் கொலையை மையப்படுத்திய படமும் கூட! ஆணவக்கொலை சம்பந்தமான இரண்டு சம்பவங்களையும் திரையில் பதியப்படவேண்டும் என்ற எண்ணத்திற்காகவே இயக்குநரைப் பாராட்டலாம். படத்தின் தொடக்கமே உடுமலைப்பேட்டையில் ஷங்கர் கொலை செய்யப்பட்டது போன்ற காட்சியமைப்புடன் தொடங்குகிறது. கதாபாத்திரத்தின் பெயரும் ஷங்கரே! ஆனால், அவரது காதலியின் பெயர் திவ்யா. அதாவது, கதாநாயகிக்குத் தர்மபுரி இளவரசனின் காதலி பெயரை வைத்துள்ளார் இயக்குநர். நாயகியின் அண்ணன் கதாபாத்திரம் பெயர் பவுன்ராஜ். தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை யுவராஜின் குறியீடாகக் கொள்ளலாம். ஷங்கர் திவ்யாவைக் காதலித்தார் என எழுதவே நெருடலாக உள்ளதால், நாயகன் ப்ரித்விராஜன் நாயகி வீணாவைக் காதலித்தார் எனக் கொள்ளலாம். ப்ரித்விராஜ் நாயகன் என்றாலும், பவுன்ராஜாக வ...
ப்ரித்வியின் தொட்ரா

ப்ரித்வியின் தொட்ரா

சினிமா, திரைத் துளி
தொட்ரா படத்தின் படப்பிடிப்பு பழனி, பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்படாமல் மீதமிருந்தது. அதற்கான ஐந்து நாட்கள் படப்பிடிப்பு பழனியில் நடைபெற்று வந்தது. பிருத்வி ராஜன், வீணா, எம்.எஸ்.குமார், மைனா சூசன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஏ. வெங்கடேஷ், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் உத்தமராஜா இசையில் சிம்பு ஒரு பாடலும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பதினைந்தாம் தேதி நிறைவு பெற்ற படப்பிடிப்பில் கிட்டத்தட்ட நூற்றைம்பது பேர் வரை கலந்துகொண்டனர். அவர்கள் அனைவருக்கும் இரவு விருந்தாக கிடா வெட்டி உணவு வழங்க ஏற்பாடு செய்தார் தயாரிப்பாளர் ஜெய்சந்திரா சரவணக்குமார். மகிழ்வான இவ்விருந்தோடு படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதோடு இருபத்தை...