32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ப்ரித்வியின் தொட்ரா

Dinesh R சேலம் Published: 23/03/2018 2 நிமிட வாசிப்பு Updated: 01/02/2019 சினிமா
எழுத்து அளவு:

Prithvirajan's Thodra movie

தொட்ரா படத்தின் படப்பிடிப்பு பழனி, பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்படாமல் மீதமிருந்தது. அதற்கான ஐந்து நாட்கள் படப்பிடிப்பு பழனியில் நடைபெற்று வந்தது. பிருத்வி ராஜன், வீணா, எம்.எஸ்.குமார், மைனா சூசன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஏ. வெங்கடேஷ், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் உத்தமராஜா இசையில் சிம்பு ஒரு பாடலும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

பதினைந்தாம் தேதி நிறைவு பெற்ற படப்பிடிப்பில் கிட்டத்தட்ட நூற்றைம்பது பேர் வரை கலந்துகொண்டனர். அவர்கள் அனைவருக்கும் இரவு விருந்தாக கிடா வெட்டி உணவு வழங்க ஏற்பாடு செய்தார் தயாரிப்பாளர் ஜெய்சந்திரா சரவணக்குமார். மகிழ்வான இவ்விருந்தோடு படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதோடு இருபத்தைந்து பேருக்கான உணவு, பொட்டலமாக்கப்பட்டு சாலையோரம் இருக்கும் முதியோருக்கும் ஆதரவற்றோருக்கும் படக்குழுவினர் வழங்கினர்.

ஏற்கனவே, நடைபெற்ற படப்பிடிப்பின் காட்சிகள் எடிட்டிங், டப்பிங், உட்பட அனைத்து வேலைகளும் முடிந்து தயாராக இருக்கிறது. இப்போது எடுத்த காட்சிகள் மட்டும் இணைக்கப்பட்டால் படம் வெளியீட்டிற்குத் தயாராகிவிடும்.

இயக்குநர் மதுராஜ் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். படத்தை வெகு விரைவாக நிறைவு செய்து கொடுத்தார் இயக்குநர் மதுராஜ். அடுத்தடுத்து நல்ல படங்கள் இயக்கும் இயக்குநராக அவர் வருவார். அவருக்கும், விரைந்து முடிக்க உதவிய படக்குழுவினருக்கும் எங்களது நன்றிகள்” என்றனர் ஜெ எஸ் அபூர்வா புரடெக்ஷன்ஸின் ஜெய் சந்திரா சரவணக்குமாரும், அவரது கணவர் எம்.எஸ். குமாரும்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.