
எரும சாணி விஜய் இயக்கத்தில் அருள்நிதி
வித்தியாசமான கதைக்களங்கள், தரமான திரைக்கதைகள், மாறுபட்ட கதாபாத்திரங்கள் என தன் மீதான வெளிச்சத்தை எப்போதும் அழகாக நிலை நிறுத்தி வருபவர் நடிகர் அருள்நிதி. தற்போது அதன் நீட்சியாக இணைய உலகில் ‘எரும சாணி’ மூலம் புகழ் பெற்ற விஜய் குமார் ராஜேந்திரன் இயக்கும் படத்தில் இணைந்துள்ளார். MNM Films சார்பில் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான அரவிந்த் சிங் படம் குறித்து கூறியதாவது, ”இப்படம் கல்லூரி வாழ்வின் பின்னணியில் உண்மையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. ஆரம்பத்தில் விஜய் இந்தக் கதையைக் கூறிய போதே அதில் பல உற்சாகமிகு தருணங்களுடன் பரபரப்பும் நிறைந்திருந்தது. இந்தப் படத்தின் திரைக்கதையை முடித்தவுடன் நாங்கள் முதல் வேலையாக நடிகர் அருள்நிதியை தான் அணுகினோம். எப்போதும் தரமான பரீட்சார்த்த முயற்சிகளுக்குச் செவி சாய்ப்பவர் அவர். ...

