
Moonwalk – எல்லாப் பாடல்களும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கே!
பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தியாவின் இரண்டு ஐகானிக் நாயகர்களான ஏ.ஆர்.ரஹ்மானும் பிரபுதேவாவும், 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றிணையும் திரைப்படம் ‘மூன்வாக்’ ஆகும். பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனரும் சி.ஈ.ஓ.வுமான திரு. மனோஜ் நிர்மல ஸ்ரீதரன் இப்படத்தினைத் தயாரித்து இயக்குகிறார்.
தன் நீண்ட திரை வாழ்க்கையில் முதல் முறையாக, ஒரு படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களையும் அவரே பாடியுள்ளார் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான். ஒரு படத்தின் முழு ஆல்பத்தையும் அவரே முதன்முறை பாடியிருப்பது ரசிகர்களை ஆச்சரியத்திலும் உற்சாகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
'ஏத்து', 'மெகரினா', 'மயிலே', 'டிங்கா', 'ஜிகர்' என இந்தப் படத்தில் ஐந்து பாடல்களை அறிவித்த படக்குழு, ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதத்தில் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தரும் வகையில் உருவாக்கியுள்ளது. படத்தின் அறிவிப்பு முதல் பல புதுமைகளால் அசத்தி வரும் படக்குழு...





