Shadow

Tag: ஏ.எல்.விஜய்

காதல் ரீசெட் ரிப்பீட் | Kadhal Reset Repeat review

காதல் ரீசெட் ரிப்பீட் | Kadhal Reset Repeat review

இது புதிது
ஒரு நாள் நிகழ்வு மட்டுமே ஞாபகமிருக்கும் அதிதியைத் தினம் தினம் புதிதாகக் காதலிக்கிறார் சித்தார்த். 50 First Dates (2004) படத்தின் ஒரு வரிக் கதையால் இன்ஸ்பையராகி, இசை, துரோகம், ஏமாற்றம், ஆழ்ந்த காதல் ஆகியவற்றின் கலவையாக ஒரு முக்கோண காதல்கதையைத் தந்துள்ளார் இயக்குநர் விஜய்.'சிரிச்சா போச்சு' எனும் விரதத்தைப் பூண்டவராகச் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மதும்கேஷ். அதிதி காதலைச் சொல்லும் இடத்திலும் கூட மருந்துக்கு முகத்தில் ஒரு மாற்றத்தைக் காட்டிவிடக் கூடாத என கங்கணம் கட்டிக் கொண்டு நடித்துள்ளார். இயக்குநர் விஜயின் கதாபாத்திர வார்ப்பே அப்படித்தான் என்பதைச் சிறு வயது சித்தார்த்தாக வரும் சிறுவனின் நடிப்பில் இருந்து யூகிக்க முடிகிறது. பிரதான கதாபாத்திரத்தின் உணர்ச்சியற்ற முகத்தாலோ என்னவோ, ஹாரிஸ் ஜெயராஜின் தோளில் அதிக சுமையேறி விடுகிறது. நாயகனின் காதலையோ, அவனது மனவுணர்வுகளையோ மதும்கேஷ் ...
காதல் ரீசெட் ரிப்பீட் – ஒரு musical story

காதல் ரீசெட் ரிப்பீட் – ஒரு musical story

சினிமா, திரைச் செய்தி
மாலி& மான்வி மூவி மேக்கர்ஸ், டி ஸ்டுடியோஸ், டென்வி புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில், தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் இணை தயாரிப்பில், இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகி, மார்ச் 6 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'காதல் ரீசெட் ரிப்பீட்' படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. திரையிசையுலகில் 25 ஆவது ஆண்டாக வெள்ளிவிழா காணும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜைக் கொண்டாடும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படக்குழுவினருடன் இயக்குநர் பாலா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இவ்விழாவில் பேசிய இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ''1999 ஆம் ஆண்டில் இளம் இயக்குநராக இருந்த கௌதம் மேனனைச் சந்தித்தேன். கேமரா மேன் ஆர்.டி. ராஜசேகர் மூலமாக விளம்பரப் படத்திற்காக அவர் என்னைச் சந்தித்தார். அதன் பிறகு 2000 ஆண்டில் 'மின்னலே' படத்தின் ப...
மிஷன் சாப்டர் -1 விமர்சனம்

மிஷன் சாப்டர் -1 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா விஜயன், பரத் போபண்ணா, அபிஹாசன், பேபி இயல், விராஜ், ஜேஷன் ஷா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் “மிஷன் சாப்டர் -1”.பொங்கலுக்கு வெளியான திரைப்படங்களில் ‘அயலான்’ மற்றும் ‘கேப்டன் மில்லர்’ மீது அதிகமான எதிர்பார்ப்புகள் குவிந்திருக்க, சத்தமில்லாமல் வந்து சாதித்துக் கொண்டிருக்கும் திரைப்படம். மிகப்பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியானதும், ஆங்காங்கே அடுத்து என்ன…? என்கின்ற எதிர்பார்ப்பை அழகாக படத்தின் திரைக்கதையில்  அடுக்கி ப்ரசண்ட் செய்திருக்கும் விதமும் படத்திற்கு பலமாக மாறியிருக்கிறது.ஆரம்பத்தில் என்னடா இது, நீண்ட நெடுங்காலத்திற்குப் பின்னர் பாகிஸ்தான் தீவிரவாதிகளை கேப்டன் விஜயகாந்த் இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோமோ என்கின்ற பரிதவிப்பைக் கொடுத்து கொஞ்சமாய் கலங்கவிட்டாலும், அடுத்தடுத்து வந்த காட்சிகளில் ஹீரோ ...
ஜீ. வி. பிரகாஷ் குமாரின்  ‘அடியே’  இசை மற்றும்  முன்னோட்டம் வெளியீடு

ஜீ. வி. பிரகாஷ் குமாரின்  ‘அடியே’  இசை மற்றும்  முன்னோட்டம் வெளியீடு

சினிமா, திரைச் செய்தி
மாலி & மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் பிரபா பிரேம்குமார் தயாரித்திருக்கும் 'அடியே'  திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்  நேற்று மாலை சென்னை பி.வி.ஆர். சத்யம் திரையரங்கில் வெளியிடப்பட்டது. இதனை தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல் ராஜா, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், மிஷ்கின், வெங்கட் பிரபு, ஏ எல். விஜய், சிம்பு தேவன், வசந்த பாலன், அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் இணைந்து வெளியிட்டனர்.‌'திட்டம் இரண்டு' எனும் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'அடியே'. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், RJ விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும்  இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.  மல்டிவெர்ஸ்  என்ற  எண்ணத்தை மையப்படுத்தி ரொமான்ட...
தேவி விமர்சனம்

தேவி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
89இல், 'அக்னி நட்சத்திரம்' படத்தில் கோரியோகிராஃபராக அறிமுகமான பிரபுதேவா, 27 வருடங்களுக்குப் பிறகு 'பிரபுதேவா ஸ்டூடியோஸ்' மூலம் தயாரிப்பாளராகவும் உருமாறியுள்ளார். அவரது முதல் தயாரிப்பான ‘சில சமயங்களில்’ படம் சர்வதேச வெளிச்சத்தில் நனைந்து கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கி, இந்தி என மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்ட 'தேவி' படமோ, ஒரே நாளிலேயே (அக்டோபர் 7) மூன்று மொழிகளிலுமே வெளியாகி, ஒரு புதிய சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகை ஆக முடியாத நிராசையில் தற்கொலை செய்து கொள்ளும் ரூபி, கிருஷ்ணகுமாரின் மனைவி தேவி உடலில் புகுந்து தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள விழைகிறது. தேவியின் நிலையென்ன என்பதும், இந்த இக்கட்டிலிருந்து கிருஷ்ணகுமார் எப்படி மீள்கிறார் என்பதும்தான் படத்தின் கதை. விஜயகாந்தோடு பிரபுதேவா நடித்த 'எங்கள் அண்ணா' திரைப்படம் வெளியாகி 12 வருடங்கள் ஆகிறது. பின் இப்பொழுது தான், தமிழ்த் திர...
பிரபு தேவாவுடன் இணையும் பாரா கான்

பிரபு தேவாவுடன் இணையும் பாரா கான்

சினிமா, திரைத் துளி
தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல், தெலுங்கு, ஹிந்தி என பல தரப்பு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று கொண்டிருக்கிறது, பிரபு தேவா - தமன்னா - சோனு சூட் நடிப்பில் விஜய் இயக்கும் DEVI(L) திரைப்படம். பல வருடங்கள் கழித்து மீண்டும் ஹீரோவாக நடிக்கும் பிரபு தேவா, ஹாலிவுட்டின் சிறந்த கதாசிரியர் பவுல் ஆரோன் இந்தப் படத்திற்கு விஜயுடன் இணைந்து கதை எழுதுவது, என பல சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்த நட்சத்திரக் கூட்டணியின் DEVI(L) திரைப்படம், தனது முதல் நாளில் இருந்தே பலரின் ஆர்வத்தைத் தூண்டி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்தப் படத்தை பற்றிய தகல்வல்கள் யாவும் காட்டுத்தீ போல் அனைவரிடத்திலும் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்தியாவின் முன்னணி நடன இயக்குநரான பாரா கான், இவர்களுடன் இணைந்திருப்பது படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. நடன இயக்குநராக மட்டுமில்லாமல் படத...
வியத்தகு விசாரணை – வியந்த இயக்குநர் விஜய்

வியத்தகு விசாரணை – வியந்த இயக்குநர் விஜய்

சினிமா, திரைத் துளி
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய விசாரணை, இந்தியாவில் உருவாக்கப்பட்ட மிகச் சிறந்த படம். அவர் தனது மாஸ்டர் பீஸை உருவாக்கியுள்ளார். படம் பார்த்துவிட்டு, நான் வாயடைத்துப் போனேன். அவர் திரைக்கதையைக் கையாண்ட விதத்திலும், கதாபாத்திரத் தேர்விலும் மாயம் செய்துள்ளார். அனைவரும் உண்மையிலேயே படத்தில் வாழ்ந்துள்ளனர். தினேஷ், சமுத்திரக்கனி, ஒளிப்பதிவாளர் ராமலிங்கத்துக்கும், மொத்த குழுவிற்கும் பெரிய வாழ்த்துகள். இந்தப் படம் அனைத்து வகையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. இந்திய சினிமாவின் அடையாளமாகவே ஒட்டுமொத்த உலகிற்கும் விளங்கப் போகிறது. தமிழ்த் திரையுலகத்திற்கு பெருமையான தருணமாக இது அமையப் போகிறது. படத்தை ரிலீஸுக்கு முன்பாகவே பார்க்க முடிந்ததை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டிய படம். திரையரங்குகளில் வெளியானதும், தவறவிடாமல் அனைவரும் பாருங்கள். மனதைக் கனக்க வைக்கும் அனு...