32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
குறிச்சொல்

கலையரசன்

12 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன
கொலைச்சேவல் விமர்சனம் | Kolai Seval review இது புதிது முக்கியச் செய்தி
14/03/2026 Dinesh R 2 நிமிட வாசிப்பு

கொலைச்சேவல் விமர்சனம் | Kolai Seval review

கர்ப்பிணியாக இருக்கும் அனுசுயாவைக் காளி தன் குலதெய்வமான நிறை சூலியை வழிபட அழைத்துச் செல்கிறான். அப்பயணம் கொட்டுக்காளியை நினைவுறுத்துவதாக உள்ளது. படம் தொடங்கியதுமே, ஓர் அமானுஷயத்திற்குத் தயார்ப்படுத்துகிறது சாந்தனின் பின்னணி இசை. P.G.முத்தையாவின் ஒளிப்பதிவு படத்தின் பெரும்பலம். குறிப்பாக இசையுடன் இணைந்து ட்ரோன்ஸ் ஷாட் ஏதோ ஒரு சம்பவத்திற்குப் பார்வையாளர்களைத் தயார் செய்து கொண்டே உள்ளது. கார்த்திக் தாமோதரனின் ஒலி வடிவமைப்பு, மலைக்காட்டில், ஓடை சலசலப்பில் இருக்கும் உணர்வைத் துல்லியமாக ஏற்படுத்த உதவியுள்ளது. இசையும் ஒலியும் ஏற்படுத்தும் […]

முழுமையாகப் படிக்க
செய்திகள் வரிசை (பக்கம் 1)
மெட்ராஸ்காரன் விமர்சனம் இது புதிது

மெட்ராஸ்காரன் விமர்சனம்

திருமணத்திற்கு முன் தினம், ஒரு கர்ப்பினி பெண் மீது காரை மோதி விடுகிறான் நாயகன். ஊரே அவனுக்கெதிராகத் திரண்டு விடுகிறது. அவ்விபத்தினால், கர்ப்பிணிப் பெண்ணுக்குக் குழந்தை இறந்து பிறக்க, ஐம்பதாயிரம் அபராதமும், இரண்டு வருடம் சிறைத் தண்டனையும் பெறுகிறான். அக்குழந்தையின் மரணத்திற்கு, தான் காரணமில்லை எனத் தெரிய வர, உண்மையைக் கண்டறியப் புறப்படுகிறான் நாயகன். நாயகன், உண்மையைக் கண்டுபிடித்து தன் குற்றவுணர்வில் இருந்து மீள்கிறானா இல்லையா என்பதுதான் படத்தின் முடிவு. இப்படத்திற்கு, ‘மெட்ராஸ்காரன்’ எனத் தலைப்பிட நிச்சயம் […]

10/01/2025 B R Murali Krishnan
மெட்ராஸ்காரன் – பொங்கல் கொண்டாட்டத்திற்கான படம் சினிமா

மெட்ராஸ்காரன் – பொங்கல் கொண்டாட்டத்திற்கான படம்

SR ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் B.ஜெகதீஷ் தயாரிப்பில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ளது “மெட்ராஸ்காரன்” திரைப்படம். ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்குக் கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம். ரங்கோலி படப்புகழ் இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாகி இருவர் வாழ்க்கையைப் புரட்டி எடுப்பதைப் பரபரப்பான திரைக்கதையாகப் படைத்துள்ளார். இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் சி எஸ். இசையமைத்துள்ளார். […]

07/01/2025 Dinesh R
வாழை விமர்சனம் இது புதிது

வாழை விமர்சனம்

வாழைத்தோட்டத்தில் வாழைத்தார்களை சுமை தூக்கப் போகும் சிறுவனின் பார்வையினின்று படம் பயணிக்கிறது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியுள்ள மாரி செல்வராஜ், இப்படத்தில் தன் பால்யத்தைத் திரைச்சித்திரமாக்கியுள்ளார். மாரி செல்வராஜின் இந்த தன்வரலாற்றுப் படத்தை, நவ்வி ஸ்டூடியோஸ் சார்பாக திவ்யா மாரி செல்வராஜ் தயாரித்துள்ளார். ஐந்து நாட்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குச் செல்லும் சிவனணைந்தான்க்கும், அவனது தோழன் சேகருக்கும், வாரயிறுதி என்றாலே எட்டிக்காயைக் கசக்கிறது. காய் சுமத்தல் எனும் வேலைக்கு நிர்ப்பந்தப்படுத்தி அனுப்பி வைக்கின்றனர் அம்மாக்கள். […]

23/08/2024 Dinesh R
மெட்ராஸ்காரன் – இருவர் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் ஆக்‌ஷன் த்ரில்லர் இது புதிது

மெட்ராஸ்காரன் – இருவர் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் ஆக்‌ஷன் த்ரில்லர்

மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர்டிஎக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகம், இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். இவருக்கு ஜோடியாக தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திரக்குடும்பமான சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து முன்னணி நடிகை நிஹாரிகா நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் கலையரசன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இணைந்து நடித்துள்ளனர். ரங்கோலி படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாகத் தீட்டிய, இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையைப் புரட்டி […]

25/07/2024 Dinesh R
Hot Spot விமர்சனம் இது புதிது

Hot Spot விமர்சனம்

இயக்குநராகும் முயற்சியில் இருக்கும் ஒருவன், தான் காதலிக்கும் பெண்ணின் அப்பாவும் தயாரிப்பாளருமான K.J.பாலமணி மார்பனிடம் கதையைச் சொல்கிறான். மொத்தம் நான்கு கதைகளைச் சொல்கிறான். அவனுக்குப் படம் இயக்க வாய்ப்பு கிடைத்ததா, அவனது காதலை அந்தத் தயாரிப்பாளர் அங்கீகரித்தாரா என்பதுதான் படத்தின் கதை. Happy Married Life, Golden Rules, தக்காளி சட்னி, Fame Game என மொத்தம் 4 கதைகள். முதல் மூன்று கதைகளும் கலகலப்பாகச் செல்ல, கடைசிக்கதை மட்டும் மனதைக் கனக்கச் செய்யும் கதையாக முயன்று […]

27/03/2024 Dinesh R
ஹாட் ஸ்பாட் | ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் படம் சினிமா

ஹாட் ஸ்பாட் | ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் படம்

கேஜேபி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே.ஜே.பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரிக்க, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹாட் ஸ்பாட்’ ஆகும். வரும் மார்ச் 29 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் கே. ஜே. பாலமணி மார்பன், “ஹாட் ஸ்பாட் எங்களுடைய முதல் தயாரிப்பு. […]

23/03/2024 Dinesh R
நட்சத்திரம் நகர்கிறது விமர்சனம் சினிமா

நட்சத்திரம் நகர்கிறது விமர்சனம்

காதல், நெருக்கம், பாலினப்பண்பு முதலியவற்றை மையமாகக் கொண்டு ஓவியம் தீட்டுவதில் வல்லவரான 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆஸ்திரிய ஓவியர் குஸ்தாவ் க்ளிம்ட் (Gustav Glimt) -இன் மிகவும் புகழ்பெற்ற ஓவியமான The Kiss இலிருந்து படத்தின் ஃப்ரேம் தொடங்குகிறது. படத்தின் மையமும், காதல், நெருக்கம், பாலினப்பண்பு ஆகியவற்றைச் சுற்றியே! இனியனின் அறைச்சுவரில், ‘தி கிஸ்’ ஓவியமும், பின்னணியில், கறுப்பினப் பெண்மணியான நினா சிமோனின் (Nina Simone) பாடலும் ஒலிக்கிறது. பாடகியும், இசையமைப்பாளருமான நினா சிமோன் ஒரு […]

31/08/2022 Dinesh R
ஐரா விமர்சனம் மற்றவை

ஐரா விமர்சனம்

‘ஐரா’ என்றால் யானையின் குறியீடு என்கிறார் இயக்குநர் சர்ஜுன். ‘என்னது ஐரான்னா யானையா?’ என வாய் பிளந்தால் ஐராவதம் என்கிறார். இதென்ன இந்திரனின் வெள்ளையான வாகனத்துக்கு வந்த சோதனை எனக் குழம்பி, யானையின் ஞாபகச்சக்திக்கும், பழிவாங்கும் குணத்திற்குமான குறியீடாகத் தலைப்பை உருவகப்படுத்திக்க வேண்டியுள்ளது. விபத்தில் இறந்துவிடும் கருப்பு நயன்தாராவான பவானியின் பழிவாங்கும் படலம் தான் ஐரா படத்தின் ஒரு வரிக் கதை. பட்டாம்பூச்சி எனப் படத்திற்குப் பெயர் வைத்திருந்தால் மிகப் பொருத்தமானதாய் இருந்திருக்கும். படத்தின் தொடக்கம் முதலே […]

28/03/2019 Dinesh R
அதே கண்கள் விமர்சனம் சினிமா

அதே கண்கள் விமர்சனம்

1967 இல், இயக்குநர் திரிலோகசந்தர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த பெரும் வெற்றி பெற்ற த்ரில்லர் படம் “அதே கண்கள்”. அந்தப் படத்திற்கு மிகக் கச்சிதமாகத் தலைப்பு பொருந்தியது போல், இப்படத்திற்குப் பொருந்தவில்லை. ரெஸ்டாரன்ட் ஓனரான சமையல் கலைஞர் வருணுக்குத் தீபா மீது காதல் ஏற்படுகிறது. தீபாவிடம் காதலைச் சொன்ன அன்றே ஏற்படும் விபத்தில், கண் பார்வையை மீண்டும் பெறுகிறான் வருண். ஆனால், அவனது காதலி தீபா பற்றி எந்தத் தகவலும் தெரியாமல் போய் விடுகிறது. பின் என்னாகிறது […]

27/01/2017 Dinesh R
ராஜா மந்திரி விமர்சனம் சினிமா

ராஜா மந்திரி விமர்சனம்

சூர்யா, கார்த்தி என பாசமிகு சகோதரர்கள் வாழ்க்கையில் நேரும் காதல் – கல்யாணக் குளறுபடிகள் தான் படத்தின் கதை. கல்யாணம் ஆகாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும் முதுமகன் (30 வயதைக் கடந்த ஆண்) சூர்யாவாக காளி வெங்கட். அவருக்குத் தம்பியாக கலையரசன் பிரதான பாத்திரத்தில் நடித்திருந்தாலும், காளி வெங்கட்டுக்கே படத்தின் நாயகன் என்ற அந்தஸ்த்தைத் தர முடியும். ஜஸ்டின் பிரபாகரனின் இசையில், ‘எதிர்த்த வீட்டு காலிஃப்ளவரே!’ எனத் தொடங்கும் பாடலுக்கு காளி வெங்கட் காட்டும் முக […]

24/06/2016 Dinesh R
டார்லிங் – II விமர்சனம் சினிமா

டார்லிங் – II விமர்சனம்

ஐந்து நண்பர்கள் ஒரு மாளிகையில் பேயிடம் சிக்கிக் கொள்வதால், ‘ஜின்’ எனப் பெயரிடப்பட்ட படம் ‘டார்லிங்-II’ ஆனது. படத்தை ஸ்டுடியோ க்ரீன் வாங்கியது தலைப்பு மாற்றதுக்கான பிரதான காரணம். இயக்குநரின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமிது. ஒரு விளையாட்டுத்தனம் எப்படி விபரீதம் ஆகிறது என்பதுதான் படத்தின் கதை. ‘காற்றில் ஒரு’ என்ற பாடலுடன் தொடங்குகிறது படம். அந்தப் பாடல், படத்தைப் பற்றிய முழுப் பிம்பத்தை அளிப்பதோடு, மனப்பிழற்வுக்கு உள்ளாகும் ஒரு இளம்பெண்ணுடைய […]

02/04/2016 Dinesh R