32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ஹாட் ஸ்பாட் | ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் படம்

Dinesh R சேலம் Published: 23/03/2024 3 நிமிட வாசிப்பு Updated: 26/03/2024 சினிமா
எழுத்து அளவு:

கேஜேபி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே.ஜே.பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரிக்க, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹாட் ஸ்பாட்’ ஆகும். வரும் மார்ச் 29 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தயாரிப்பாளர் கே. ஜே. பாலமணி மார்பன், “ஹாட் ஸ்பாட் எங்களுடைய முதல் தயாரிப்பு. விக்னேஷ் நாலு வருடமாகப் பழக்கம். லாக்டவுன் டைமில் ஒரு ஷார்ட் ஃபிலிம் செய்தோம். ‘திட்டம் இரண்டு’ படம் செய்த போதே இப்படத்தின் கதை சொன்னார். எனக்குப் பிடித்திருந்தது. ட்ரெய்லர் மிகப் பெரிய அலையை ஏற்படுத்தியுள்ளது. படம் பற்றி நிறையக் கருத்துக்கள் வருகிறது. படம் பாருங்கள் பிடிக்கும். அதன் பிறகு கருத்துச் சொல்லுங்கள்” என்றார்.

சிக்ஸர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், “விக்னேஷின் ‘திட்டம் இரண்டு’ படம் நாங்கள் தயாரித்தோம். ஒரு போல்டான கருத்தைப் பொறுப்புடன் கையாள்வார். படத்தின் ட்ரெய்லர் பார்த்து எதுவும் நினைக்க வேண்டாம், படம் பாருங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். எல்லா நடிகர்களும் மிகத் தைரியமாக நடித்துள்ளார்கள்” என்றார்.

நடிகை அம்மு அபிராமி, “என்னை இந்தப் பாத்திரத்திற்குத் தேர்ந்தெடுத்த விக்னேஷ் அவர்களுக்கு நன்றி. முதலில் கதை சொன்ன போது பயந்தேன், ‘திட்டம் இரண்டு’ பார்த்த பிறகு தான் அவரின் கதை சொல்லும் முறை புரிந்தது. மீண்டும் கதையைச் சொல்லச் சொல்லிக் கேட்டேன். என்னோட கதாபாத்திரம் மிக நன்றாக வந்துள்ளது” என்றார்.

நடிகர் ஆதித்யா பாஸ்கர், “ஒன்றரை வருஷம் முன்னாடி இந்த ஸ்கிரிப்ட் தந்தார்கள். எப்போது இது நடக்கும், படப்பிடிப்பீற்குப் போவோம் என ஆவலாக இருந்தேன். என்னை இப்படத்தில் தேர்ந்தெடுத்த இயக்குநருக்கு நன்றி. இந்தப் படம் மிக போல்டான கதை, இந்தப் படத்தைப் பத்திரிகையாளர்கள் புரிந்து கொண்டு ஆதரவு தர வேண்டும். படத்தில் எங்கும் உங்கள் முகம் சுளிக்கும்படி எதுவும் இருக்காது” என்றார்.

நடிகர் கலையரசன், “இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியான போதே திரையுலகிலிருந்து, பலர் ஃபோன் செய்து திட்டினார்கள். ஆனால் முழுப்படமும் பார்த்தால் உங்களுக்கு இதன் அர்த்தம் புரியும். விக்னேஷ் கதை சொல்லும் விதம் மாறுபட்டு இருக்கலாம், ஆனால் அது சென்று சேரும் இடம் சரியாக இருக்கும். என் கதை மட்டும் தான் எனக்குத் தெரியும். ஆனால் விக்னேஷ் பிரதர் மீது நம்பிக்கை இருக்கிறது. ‘யுவர்ஸ் ஷேம்ஃபுலி’ எனத் தொடர் எடுத்தார். அதுவும் இந்த மாதிரி, அலைகளை ஏற்படுத்தியது. ஆனால் அது முடியும் போது மிக அழகாக நம்மைச் சிந்திக்கும்படி செய்யும். அதே போல் இந்தப் படமும் இருக்கும்” என்றார்.

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், “ஹாட் ஸ்பாட் படத்தை என் நண்பர்கள் தான் தயாரித்துள்ளனர். என் மீதான நம்பிக்கை மட்டும் தான் காரணம் அவர்களுக்கு நன்றி. நிறைய நடிகர்கள் நடித்துள்ளனர், எல்லோரும் கதையை நம்பி மட்டுமே வந்துள்ளனர். எல்லோரும் அருமையாக நடித்துள்ளனர். ‘யுவர்ஸ் ஷேம்ஃபுலி’ எனத் தொடர் எடுத்தேன். அது ஏற்படுத்திய எதிர்வினைகளைத் தான் இந்தப் படமும் ஏற்படுத்தும் என நம்புகிறேன். தப்பான கருத்தைச் சொல்லிவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமுடன் வேலை பார்த்துள்ளோம்” என்றார்.

இப்படத்தில் கலையரசன், ‘96 பட ஆதித்யா பாஸ்கர், கௌரி கிஷன், சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், ‘திட்டம் இரண்டு’ படத்தின் நாயகன் சுபாஷ், சோபியா முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சதீஷ் ரகுநாதன், வான் ஆகியோர் இசையமைக்கிறார்கள். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்கிறார். முத்தையன் படத்தொகுப்புப் பணியை மேற்கொண்டு இருக்கிறார்.

மார்ச் 29 ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. சிக்ஸர் எண்டெர்டைன்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் தினேஷ் கண்ணன் அவர்கள் வெளியீடுகிறார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.