
காந்தி டாக்ஸ் – மார்ச் 6 முதல் | Zee 5
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்திருக்கும் 'காந்தி டாக்ஸ்' திரைப்படம், மார்ச் 6 முதல் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் Z5 இல் வெளியாகின்றன.Zee Studios, Moviemill மற்றும் Kyoorius நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், அதன் துணிச்சலான கதை சொல்லல், வலுவான நடிப்பு மற்றும் மொழியைத் தாண்டிய தனித்துவமான திரைப்பட அணுகுமுறைக்காக பரவலாக பாராட்டப்பட்டது. சமகாலத்தில் அரிதாக உருவாகும் மௌன திரைப்படமாக இது திகழ்கிறது. முழுவதும் காட்சிகள் மற்றும் உணர்ச்சி வெளிப்பாடுகள் மூலம் கதை சொல்லப்பட்டுள்ள இந்தப் படம், ஏ.ஆர். ரஹ்மான் அமைத்துள்ள ஆன்மாவை வருடும் இசையால் மேலும் வலுப்பெறுகிறது.
இப்படம், தனிப்பட்ட இழப்புகள், பொருளாதார சிரமங்கள் போன்ற சூழ்நிலைகளில் சிக்கிக் கொண்டுள்ள சில மனிதர்களின் வாழ்க்கைப் பயணங்களை இணைத்துச் சொல்க...


