32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

காந்தி டாக்ஸ் – மார்ச் 6 முதல் | Zee 5

Dinesh R சேலம் Published: 02/03/2026 2 நிமிட வாசிப்பு Updated: 06/03/2026 OTT
எழுத்து அளவு:

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்திருக்கும் ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படம், மார்ச் 6 முதல் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் Z5 இல் வெளியாகின்றன.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

Zee Studios, Moviemill மற்றும் Kyoorius நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், அதன் துணிச்சலான கதை சொல்லல், வலுவான நடிப்பு மற்றும் மொழியைத் தாண்டிய தனித்துவமான திரைப்பட அணுகுமுறைக்காக பரவலாக பாராட்டப்பட்டது. சமகாலத்தில் அரிதாக உருவாகும் மௌன திரைப்படமாக இது திகழ்கிறது. முழுவதும் காட்சிகள் மற்றும் உணர்ச்சி வெளிப்பாடுகள் மூலம் கதை சொல்லப்பட்டுள்ள இந்தப் படம், ஏ.ஆர். ரஹ்மான் அமைத்துள்ள ஆன்மாவை வருடும் இசையால் மேலும் வலுப்பெறுகிறது.

இப்படம், தனிப்பட்ட இழப்புகள், பொருளாதார சிரமங்கள் போன்ற சூழ்நிலைகளில் சிக்கிக் கொண்டுள்ள சில மனிதர்களின் வாழ்க்கைப் பயணங்களை இணைத்துச் சொல்கிறது. எதிர்பாராத விதமாக அவர்கள் பாதைகள் ஒன்றாக மோதும் போது, அது உயிர்வாழ்வுக்கான போராட்டமாக, மனித உறவுகளின் தீவிரமான கதையாக மாறுகிறது. உரையாடல்கள் இல்லாமல், நடிப்பு, காட்சிகள் மற்றும் இசை மூலமாகவே ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்தப் படம், பார்வையாளர்களுக்கு முழுமையான மற்றும் மனதை நெகிழ்விக்கும் அனுபவத்தை வழங்குகிறது.

நடிகர் விஜய் சேதுபதி, “ஒரு சொல் கூட பேசாமல் இவ்வளவு விஷயங்களை வெளிப்படுத்தும் திரைப்படம் என்பதால் ‘காந்தி டாக்ஸ்’ எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த படம். உணர்ச்சிகளை முழுக்க நடிப்பின் மூலம் வெளிப்படுத்துவது ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது. திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பு மிகவும் உற்சாகமாக இருந்தது. இப்போது ZEE5 வழியாக மேலும் பலர் இந்தப் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

அதிதி ராவ் ஹைதரி, “‘காந்தி டாக்ஸ்’ படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது, அமைதியான காட்சிப் பதிவு முறை மூலம் ஒரு முழுமையான உணர்ச்சி உலகை உருவாக்கும் அதன் திறன். படத்தின் ஒவ்வொரு தருணமும் நெருக்கமான மற்றும் சிந்திக்க வைக்கும் அனுபவமாக உள்ளது. திரையரங்குகளில் கிடைத்த அனுபவம் மிகவும் திருப்திகரமாக இருந்தது. இது பார்வையாளர்களைக் கவனிக்கவும், சிந்திக்கவும் வைப்பதோடு, தங்கள் பார்வையில் வாழ்க்கையின் பொருளைக் கண்டுபிடிக்கவும் அழைக்கும் ஒரு கதை” என்றார்.

இயக்குநர் கிஷோர் பாண்டுரங்க் பெலகர், “‘காந்தி டாக்ஸ்’ எனக்கு மிகவும் தனிப்பட்ட மற்றும் சவாலான முயற்சி. உரையாடல்கள் இன்றி ஒரு கதையைச் சொல்ல வேண்டியிருந்ததால், காட்சிகள், நடிப்பு மற்றும் இசையின் சக்தியை முழுமையாக நம்ப வேண்டியிருந்தது. திரையரங்குகளில் கிடைத்த அன்பும் பாராட்டும் எங்களை மிகவும் உற்சாகப்படுத்தியது” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.