
Con City – பணம் அச்சிடும் இயந்திரம் கிடைத்தால்?
கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஒரு பணம் அச்சிடும் மெஷின் கிடைப்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘கான் சிட்டி’ படம், அதன்பிறகு நடக்கும் சம்பவங்களை நகைச்சுவை மற்றும் பரபரப்புடன் சொல்கிறது. இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய நடிகை அன்னா பென், “இது எனது இரண்டாவது தமிழ்த் திரைப்படம். கொட்டுக்காளி படத்தில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தபோது நீங்கள் கொடுத்த அன்பும் பாராட்டும் எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. அந்த மீனா கதாபாத்திரத்திற்கு முற்றிலும் எதிர்மாறான ஒரு வேடத்தில் தான் ‘கான் சிட்டி’ படத்தில் நடித்திருக்கிறேன்.
இயக்குநர் ஹரிஷ் முதன்முதலில் இந்தக் கதாபாத்திரத்தை என்னிடம் கூறியபோது எனக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. இதுவரை நான் நடித்திராத ஒரு புதிய பரிமாணத்தில் இருக்கும் கதாபாத்திரம் அது. நடி...

