
கார்மேனி செல்வம் விமர்சனம் | Carmeni Selvam review
ஒரு பணக்காருக்குக் கார் ஓட்டுநராகப் பணி புரியும் செல்வம், அவரது வாழ்வில் எதிர்கொள்ளும் எதிர்பாரா நெருக்கடியும், அதைச் சமாளிக்க அவர் தேர்ந்தெடுக்கும் பாதையும், அப்பாதையில் எழும் விளைவுகளே இப்படத்தின் மையச்சரடு.
பணக்கார முதலாளி சம்பத்தாக வரும் கெளதம் வாசுதேவ் மேனன், அப்பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். அவரது மனைவி தேவியாக நடித்துள்ள அபிநயா மிகச் சில காட்சிகள் வந்தாலும், படத்தில் அவரது பங்கைச் சிறப்பாகச் செய்துள்ளார். இந்தப் படத்தில் வரும் செல்வம் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவன். அதனால்தான் சம்பத் போலும், தேவி போலும் முதலாளிகள் அவனுக்குக் கிடைத்துள்ளனர். அவனது அழகான சின்ன வாடகை வீடும், பணக்கார முதலாளியே பொறாமைப்படும் இடத்தில் அமைந்துள்ளது. அவனுக்கு இக்கட்டான சூழலில் உடனுக்கு உடன் கடன் கிடைக்கிறது, அதை அடைக்க வழியும் கிடைக்கிறது. அதை எல்லாம் அனுபவித்துக் கொண்டு, மற்றவர்களுக்கு, ‘ஃபோன...



