Shadow

Tag: கீதன்

சீமத்துரை விமர்சனம்

சீமத்துரை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சீமை - அரசர் ஆண்ட நிலப்பகுதி அல்லது வெளிநாடு என இரு வேறு பொருளைக் கொள்ளலாம்; துரை - இந்தியாவில் வசித்த ஐரோப்பியர்களைக் குறிக்கும் சொல். ஆக, சீமைத்துரை என்றால் அதிகாரத் தோரணை மிகுந்த நடத்தையை உடையவர் எனப் பொருள் கொள்ளலாம். நாயகன் அப்படிப்பட்ட குணவார்ப்பு உடையவரெல்லாம் இல்லை. ஆனால், அவரது அம்மாவிற்கு தன் மகன் சீமத்துரை என்ற நினைப்பு. ஊரில் ஏதாவது உரண்டையை இழுத்துவிடும் கல்லூரி மாணவன் மருது. அவனுக்குப் பூரணியைக் கண்டதுமே முதல் பார்வையில் காதல் வருகிறது. அந்தக் காதல் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. '96 படத்தில் விஜய் சேதுபதியின் மாணவியாக வரும் வர்ஷா பொல்லம்மா தான் படத்தின் நாயகி. அப்பாவின் அன்புக்கும், மருதுவின் காதலுக்கும் இடையில் தவிக்கும், பூரணி எனும் பாத்திரத்தில் நிறைவாக நடித்துள்ளார். அவரது பெரிய கண்களுக்கு மட்டும் க்ளோஸ்-அப் வைத்துள்ளார் திருஞானசம்பந்தம். கண்களால் தன் உணர்வுகளைப் ...