Shadow

Tag: சமந்தா

தெறி விமர்சனம்

தெறி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘சிதறி விசையுடன் விழுதல்’ என தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். விஜய்குமார் நேர்மையான நல்ல காவல்துறை அதிகாரி. அவர் நீதியை நிலை நாட்ட கொடூரமாக ஒரு கொலை செய்து விடுகிறார். நல்லவனே கொலை செய்யும் போது, கெட்டவன் சும்மா இருப்பானா? ஒரு கொலைக்குப் பதிலாக நான்கு கொலைகள் என இலக்கு நிர்ணயித்து பழி வாங்குகிறார் வானமாமலை. நாயகன் கதியென்ன? வானமாமலை வதம் நடந்து தர்மம் வென்றதா? எதார்த்தத்தில் நிகழ்வது போல் அதர்மம் வென்றதா? முதலிய கேள்விகள் தான் படத்தின் கதை. படத்தின் ஆச்சரியமும் அழகுமாக நிவி எனும் பாத்திரத்தில் நடித்துள்ள நைனிகாதான். நைனிகா என்றால் அழகிய கண்களுடையவர் எனப் பொருளாம். சில ஃப்ரேம்களில் மீனாவை ஞாபகப்படுத்துகிறது அவரது முகம். நைனிகா ஆளும் ஃப்ளாஷ்-பேக்கிற்கு முன்னான ஆரம்ப காட்சிகள் சாரலில் நனைந்தது போல் இருக்கிறது. பின் தொடங்கும் வழக்கமான கதை சொல்லலில் இருந்து அயர்ச்சி ஏற்படுகிறது. இடைவேளைக்குப் பி...
தங்கமகன் விமர்சனம்

தங்கமகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தன் தந்தை மீது விழும் பழியை எப்படி தங்கமகனான தமிழ் கலைகிறான் என்பதே படத்தின் கதை. ஹேமா டிசோசாவாக எமி ஜாக்சன். முடியைத் தூக்கிச் சீவிய முன் நெற்றியோடு, சுடிதார் அணிந்து வரும் அவர் மிக அந்நியமாகத் தெரிகிறார். 'ஹீரோ ஃப்ரெண்ட்' ஆக வரும் சதீஷ் முதற்பாதி கலகலப்புக்கு உதவுகிறார். தனுஷ் மீசையை மழித்தால் கல்லூரி மாணவர்; மீசை வைத்தால் பொறுப்பான மகனும் மனிதனும் ஆகி விடுகிறார். ஆனால் சதீஷின் உடல் வாகிற்கு, அத்தகைய  மாற்றம் பொருந்தவில்லை. மறதியில் தவிப்பவராகவும், பாசமானதொரு தந்தையாகவும் வருகிறார் கே.எஸ்.ரவிக்குமார். எனினும் வழக்கமான அவரது கலகலப்பு மிஸ்ஸிங். வி.ஐ.பி.யில் அம்மா சென்ட்டிமென்ட் என்றால் இப்படத்தில் அப்பா சென்ட்டிமென்ட்டைத் தொட்டுள்ளார் இயக்குநர் வேல்ராஜ். தனுஷின் அம்மாவாக ராதிகா சரத்குமாரும், அத்தையாக சீதாவும் நடித்துள்ளனர். சில காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும், ஜெயப்ரகாஷ் அழுத்தமான கதாபா...
10 எண்றதுக்குள்ள விமர்சனம்

10 எண்றதுக்குள்ள விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
10 எண்றதுக்குள்ள எதையும் சாதித்து முடிக்கக் கூடியவர் படத்தின் நாயகன். அதைக் கேட்டு, ‘ஐய்யய்யே.!’ என அரை லூஸு நாயகியே உதட்டைச் சுழிக்கிறார். படம், மிக முக்கியமான சமூக அவலத்தில் இருந்து தொடங்குகிறது. நாயகனாகப்பட்டவர் அதில் சிக்கி, அதிலிருந்து தப்பிக்க எப்படி அதை மேலும் தீ மூட்டித் தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. நாயகியின் பெயரை ஷகீலா என வைத்ததில் தொடங்கி, சமந்தாவின் கதாபாத்திரத்தை அதிக கவனமுடன் லூஸுத்தனமாகவே உருவாக்கியுள்ளனர். சீரியசான படத்துக்கு, மிக மிக இடைஞ்சலாய் உள்ளார் சமந்தா. அவரை விடவும் படத்தின் பாடல்கள், மிகப் பெரிய வேகத்தடையாக உள்ளது. ‘என் கடமை உயிரை விட்டு நடிப்பது’ என விக்ரம், இந்தப் படத்திலும் தன் கடமையைச் செவ்வனே செய்கிறார் விக்ரம். வயோதிகம் லேசாக முகத்தில் எட்டிப் பார்த்தாலும், ஆடல் பாடல் சண்டைக் காட்சிகளில் ஒரு குறையும் வைக்காமல் இளமை துள்ள திரையில் வலம் வருகிறார். ...