Shadow

Tag: சித்தார்த்

காவியத் தலைவன் விமர்சனம்

காவியத் தலைவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அரவானைத் தொடர்ந்து வசந்த பாலனிடமிருந்து மீண்டுமொரு பீரியட் ஃப்லிம். ஸ்ரீலஸ்ரீ பாலசண்முகானந்தா நாடக சபாவை நடத்தி வருகிறார் சிவதாஸ் ஸ்வாமிகள். அவரது சீடர்களில் ஒருவனான கோமதி நாயகம் ராஜபார்ட்டாக நடிக்க ஆசைப்படுகிறான். ஆனால் மற்றொரு சீடரான காளியப்பனுக்கு அந்த வாய்ப்பை வழங்குகிறார் சிவதாஸ் ஸ்வாமிகள். பொறாமைக் கனல் கொழுந்து விட்டெறியும் கோமதி நாயகம், சதித் திட்டம் தீட்டி காளியப்பனை ஓரங்கட்டுகிறான். பின் என்னாகிறது என்பதுதான் கதை. படத்தின் நாயகன் காளியப்ப பாகவதராக சித்தார்த். சூரபத்மனாக நடித்துக் காட்டும்போது அசத்துகிறார். இரண்டாம் பாதியில், இதுநாள் வரை பார்த்துப் பழகிய சித்தார்த்தாகவே திரையில் தெரிகிறார். மலையாள நெடியுடன் வசனம் பேசும் ப்ரித்விராஜ், கோமதி நாயகமாக தன் பொறாமையையும் வன்மத்தையும் கண்களில் தேக்கியபடி படம் முழுவதும் வருகிறார். சித்தார்த் போலில்லாமல் கடைசி வரை கோமதி நாயகமாகவே தெரிகிறா...
ஜிகர்தண்டா விமர்சனம்

ஜிகர்தண்டா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பொழுதுபோக்கு என்றால் அது சினிமா மட்டும்தான் என்றாகிவிட்டது. சாவு வீட்டிற்கு ஒரு நடிகன் வந்தால், இறந்தவர் பற்றிய நினைவலைகள் தடைபட்டு நாயகனைப் பற்றிய பிம்பம் அவ்விடத்தில் மேலோங்குகிறது. துக்கத்துடன் நடிகர் ஜீவா ஏதேனும் சாவு வீட்டிற்குச் சென்றால், “மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்!” எனச் சொல்லச் சொல்லி அவரை தர்மசங்கடத்திற்கு ஆட்படுத்துவார்களாம். இடம் பொருள் ஏவல் என மூன்றிற்கும் கட்டுப்படாமல், ஒரு கனவுநிலையையோ எக்ஸைட்மென்ட்டையோ உருவாக்கும் சர்வ வல்லமை பெற்றது சினிமா. தனது கனவினை அறுவடை செய்ய எவர் தோளிலும் பயணிக்கும் கார்த்திக்கிற்கும், தன் மீதுள்ள பயத்தை இலக்கற்று அறுவடை செய்யும் சேதுவுக்கும் இடையில் நிகழும் கதை. படத்தின் நீளம் 170 நிமிடங்கள் என்றதும் ஒருவித அயர்ச்சி மனதில் எழுகிறது. ஆனால் படம் பார்க்கும் பொழுது அத்தகைய சலிப்புகள் எழாமல் இருப்பதுதான் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் வெற்றி. நே...
“பரீட்சைக்கு நேரமாச்சு” – ‘ஜிகர்தண்டா’ லட்சுமி மேனன்

“பரீட்சைக்கு நேரமாச்சு” – ‘ஜிகர்தண்டா’ லட்சுமி மேனன்

சினிமா, திரைச் செய்தி
“எனக்கு படத்தில் கொஞ்ச நாள்தான் ஷூட்டிங் இருந்தது. என்னுடைய ஃபேவரைட் ஹீரோக்களில் சித்தார்த்தும் ஒருவர். அவருக்கு ஹீரோயினாக நடிச்சது ரொம்ப சந்தோஷமாக இருக்கு” என்ற லட்சுமி மேனனுக்கு ஒரு பெரிய வருத்தம். பதினோராம் வகுப்பு பரீட்சை தொடங்கியதால்.. ‘ஜிகர்தண்டா’ ஆடியோ லான்ச்க்கு வர முடியாமல் போய்விட்டதென லட்சுமி மேனன் ரொம்பவே ஃபீல் பண்ணார். அதற்கென்னச் செய்ய முடியும்? படிக்கிற பிள்ளைங்களுக்கு சினிமாவால் சோதனைகள் வருவது சகஜம்தானே! “லட்சுமி மேனன்.. லெவன்த்தான் படிக்கிறாங்க. நான் சொல்றதைப் புரிந்து கொண்டு நடிப்பாங்களான்னு சந்தேகமாகவே இருந்தது. அவங்க மெச்சூரிட்டி லெவல் எப்படியிருக்கணும் நினைச்சுட்டிருந்தேன். ஆனா நாம எதிர்பார்க்கிற எக்ஸ்ஃபிரஷன்ஸை அவங்க முகமும் கண்ணும் கொடுத்துடுது. சித்தார்த்துக்கும், லட்சுமி மேனனுக்கும் எமோஷனல் சீன்ஸ் வரும். பயந்துட்டே இருந்தேன். பார்க்க எனக்கே ரொம்ப பிடிச்சிருந்தது”...
உதயம் விமர்சனம்

உதயம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மழைப் பொய்த்த மாரிக் காலத்திற்கு பின் வரும் கடும்கோடையின் வறட்சி போல தமிழ்த் திரைப்படங்களில் கதைக்கான வறட்சி நிலவுகிறது.கதையில் பல ‘மீண்டும்’. பதின்மத்தில் இருக்கும் நாயகி காதல் வயப்படுகிறாள். அவளை, காவலை மீறி நாயகன் தூக்கிச் செல்கிறான். தங்களை துரத்துபவர்களிடம் இருந்து காதலர்கள் தப்பினரா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.தேசிய விருதுகள் பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பாளராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வியக்க வைக்கிறார். இது அவரது முதற்படமாக வர வேண்டிய திரைக்கதை என சொல்லப்படுகிறது. பிருத்விராஜ் – சம்யுக்தா கதை எண்ணற்ற முறை சொல்லப்பட்டு விட்டாலும், அதை மற்றொரு முறை சுவாரசியமாக சொல்ல முயன்றுள்ளார். படத்திலிருந்து பார்வையாளனை விலகாமல் பார்த்துக் கொள்கிறார். ஆனால் படம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. உதாரணம் நாயகி போலவே நாயகன் “எப்படி”யும் வந்த...