Shadow

Tag: தமிழ் இலக்கியம்

இலக்கியத்தில் கிருஷ்ணன் நம்பியின் இடம்!

இலக்கியத்தில் கிருஷ்ணன் நம்பியின் இடம்!

புத்தகம்
ஜூன் 16 ஆம் நாள் மறைந்த எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பியின் நினைவு தினம். 1976 இல் மறைந்த இவரது நினைவுகளைக் கடந்த சில வருடங்களாக இதுதமிழ் தளத்தில் பகிர்ந்து வருகிறேன். சொல்வதற்கு ஏராளமாக இருந்தாலும், என்னுள் இருக்கும் சில மனக்குறைகளை இக்கட்டுரையின் வாயிலாக இப்பொழுது பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன். ஒருமுறை எழுத்தாளர் திலீப் குமாருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது, தமிழ் எழுத்துலகில் மிகவும் குறைந்த மதிப்பீடுகளுக்கு உள்ளானவர் கிருஷ்ணன் நம்பி என வருந்திச் சொன்னார். மதிப்பீடு செய்த சில எழுத்தாளர்களும் நம்பியைச் சரியாக மதிப்பீடு செய்தார்கள் எனச் சொல்லமுடியாது. அந்த எழுத்தாளர்கள் வரிசையில் வண்ணநிலவன், அசோகமித்திரன் போன்றவர்களைச் சொல்லலாம். சுந்தர ராமசாமி, நம்பியின் மிக அணுக்க நண்பராக இருந்தும் கூட, நம்பியின் சிறுகதைகள் பற்றிய அவரது விமர்சனங்கள் ஏமாற்றத்தையே அளிக்கிறது. இந்த மூவரில், அசோகமித்திரனும...