Shadow

Tag: தரமணி vimarsanam

தரமணி விமர்சனம்

தரமணி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'தரமணி' எனும் தலைப்பை, ஓர் ஏரியா பெயராகவோ ஸ்டேஷன் பெயராகவோ கொள்ளாமல், சாதாரண மக்களையும் ஐ.டி. மக்களையும் இணைக்கும் காரிடாரின் குறியீடாகக் கொள்ளலாம். பொருளாதாரச் சுதந்திரமுள்ள பெண்ணின் நடவடிக்கைகள் அவளைச் சார்ந்து வாழத் தொடங்கும் ஆணுக்கு எந்தளவுக்குப் பாதுகாப்பாற்ற உணர்வை ஏற்படுத்துமெனப் படம் தெள்ளத் தெளிவாகப் பேசுகிறது. படிச்ச முண்டை, தேவிடியா, பிட்ச் பிட்ச் பிட்ச், இங்க புழு பிடிச்சுடும் என இந்தப் படத்தில் வரும் வசனங்களுக்கு A செர்ட்டிஃபிகேட் அளிக்கப்படாமல் இருந்திருந்தால் தான் இயக்குநர் ராம் நியாகமாகக் கோபப்பட்டிருக்க வேண்டும். ஐ.டி.யில்/பி.பி.ஓ.வில் வேலை செய்பவர்களே இப்படித்தான் எனக் குறை கூறும் மனோபாவத்தை இயக்குநர் ராமால் தவிர்த்துக் கொள்ளவே முடியவில்லை. நடனத்தில் விருப்பமுள்ள மனைவி வேறொருவருடன் நடனமாடுவதைப் பெரிய விஷயமாகக் கருதாத கணவனை எள்ளி நகையாடுகிறார் ராம். கார்ப்ரெட் கலாச்சாரமே...