Shadow

Tag: நமீதா கிருஷ்ணமூர்த்தி

யெல்லோ விமர்சனம் | Yellow review

யெல்லோ விமர்சனம் | Yellow review

சினிமா, திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் வன்முறை படங்களே மேலோங்கி இருக்கும் சூழலில் அத்தி பூத்தாற்போல ஆங்காங்கே வெளியாகும் மென்மையான ஃபீல் குட் படங்கள் ரசிகர்கள் மனதை வருடிச் செல்வதோடு மிகப்பெரிய வெற்றியையும் பெறுகின்றன. மிகச் சமீபத்திய உதாரணங்களாக லப்பர் பந்து, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களைச் சொல்லலாம். அந்த வகையில் ஒரு பெண்ணின் உணர்வுகளை மையப்படுத்தி இந்தியில் வெளியான குயின் படத்தை போல தமிழில் வெளியாகியிருக்கும் படம் தான் “யெல்லோ”வாகும். பிக் பாஸ் பிரபலம் “அராத்தி” பூர்ணிமா ரவி கதையின் நாயகியாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த்துள்ளார். ரோடு ட்ராமா வகைமையைச் சேர்ந்த இந்தப் படத்தில் காதல் தோல்வி, சொந்த வாழ்க்கையில் அப்பாவின் திடீர் உடல்நலக் குறைவு, தன் கேரியர், வாழ்க்கைக் கனவு சிதைந்து அல்லாடுகிறார் பூர்ணிமா ரவி. பிடிக்காத ஒரு வங்கி வேலையில் மெஷின் போல வேலை செய்து வரும் நாயகி, ஒரு கட்டத்தில் சில நாட்கள் கிடைத்த வி...
காந்தி கண்ணாடி விமர்சனம் | Gandhi Kannadi review

காந்தி கண்ணாடி விமர்சனம் | Gandhi Kannadi review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பணம் உறவுகளைப் பிணைத்து, வாழ்க்கைச் சூழலை மேம்படுத்தும் என நம்புபவன் கதிர். சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளைத் தவறவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பவன். காதல் திருமணம் புரிந்து கொண்டு, ஊரை விட்டு ஓடி வந்த காந்தி, மனைவிதான் உலகம் என வாழ்பவர். காந்தி தன்னுடைய அறுபதாம் கல்யாணத்தைப் பிரம்மாண்டமாக நடத்தித் தரும்படி எவென்ட் மேனேஜ்மென்ட் செய்யும் கதிரிடம் செல்கிறார். கதிரும் காந்தியும் சந்தித்துக் கொள்வதில் தொடங்கும் படம், கதிரின் வாழ்க்கையில் அச்சந்திப்பு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதோடு முடிகிறது. காட்சிரூபமாகக் கதைசொல்வதை விட வசனங்களின் மூலமே அனைத்தையும் சொல்லிவிடலாம் என்ற பாணியால், ஒரு ஃபீல்-குட் படத்திற்கான அத்தனை அம்சங்களைக் கொண்டிருந்தும், படம் அதன் இலக்கை அடையத் தடுமாறியுள்ளது. ஒரு நல்ல ஐடியாவை எடுத்துக் கொண்டு, அதில் முழுத் திருப்தியுற்று, சுவாரசியமாகவோ நெகிழ்ச்சியாகவோ திரைக்கதைய...
“எனக்குக் கிடைத்த 50 ஆசீர்வாதங்கள்” – நமீதா கிருஷ்ணமூர்த்தி | காந்தி கண்ணாடி

“எனக்குக் கிடைத்த 50 ஆசீர்வாதங்கள்” – நமீதா கிருஷ்ணமூர்த்தி | காந்தி கண்ணாடி

சினிமா, திரைச் செய்தி
ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில், ஜெய் கிரண் தயாரிப்பில், ‘ரணம்’ பட இயக்குநர் ஷெரீஃப் இயக்கத்தில், KPY பாலா நாயகனாக நடித்துள்ள படம் “காந்தி கண்ணாடி” ஆகும். நமீதா கிருஷ்ணமூர்த்தி நாயகியாக நடிக்க, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா, அமுதவாணன், மனோஜ், மதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு விவேக் - மெர்லின் இசை அமைத்திருக்கிறார்கள். வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் சக்திவேலன் தமிழகம் முழுக்க வெளியிடுகிறார். இப்படத்தின் நாயகனான KPY பாலாவிற்கு நாயகியாக நடிக்க பலர் தயங்கியுள்ளனர். இதைப் பற்றிப் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பாலா, “இப்படத்துக்கான ஹீரோயின் தேர்வு எனக்கு மிகப் பெரிய அனுபவமாக இருந்தது. இயக்குநர் அலுவலகத்தில் பல நடிகைகள் கதை கேட்பார்கள். நான் ஹாலில் காத்திருப்பேன். ‘கதை நன்றாக இருக்கிறது. யார் ஹீரோ?...
குலுகுலு விமர்சனம்

குலுகுலு விமர்சனம்

இசை விமர்சனம், இது புதிது, சினிமா
மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய ரத்னகுமாரின் அடுத்த படைப்பு. ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபட்ட ஜானராகவே தன் படங்களைக் கொடுத்து வருகிறார். இம்முறை, மிகவும் மாறுபட்ட நகைச்சுவைப் படத்தை இயக்கி அசத்தியுள்ளார். அமேசான காடுகளில் வசிக்கும் ஓர் இனக்குழுவில் பிறந்த மாரியோ, பல நாடுகள் பயணித்து, பதிமூன்று மொழிகள் கற்று தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார். வாழ்க்கை முழுவதும் பயணமும், அதனால பலவற்றைப் பற்றிய ஞானத்தினையுடைய மாரியோ, அனைத்தும் தெரிந்தவர் என்ற பெயரில் கூகுள் என அழைக்கப்படுகிறார். அதுவும் மழுவி குலுபாய் என்றும் அழைக்கப்படுகிறார். யாரெந்த உதவி கேட்டாலும் செய்யக் கூடியவரான குலுபாயிடம், கடத்தப்படும் தன் நண்பனைக் கண்டுபிடிக்கச் சொல்லி உதவி கேட்கிறார்கள் மூன்று இளைஞர்கள். பிரான்ஸில் இருந்து வரும் மதில்டா எனும் இளம்பெண்ணை, அவளது அண்ணன்மார் இருவர் கொலை செய்யத் துரத்துகின்றனர். தன் தம்பியை விடுவிக்க, கடத...