Shadow

Tag: நிவாஸ் ஆதித்தன்

Game of Loans – சூதாட்டம், கடன், விரக்தி, உளவியல் வலை

Game of Loans – சூதாட்டம், கடன், விரக்தி, உளவியல் வலை

சினிமா, திரைத் துளி
'கேம் ஆஃப் லோன்ஸ்' என்பது அபிஷேக் லெஸ்லி எழுதி இயக்கிய உளவியல் சார்ந்த திரைப்படமாகும். படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட்-லுக் போஸ்டரும் ஐஸ்வர்யா ராஜேஷால் ஆகஸ்ட் 13 அன்று வெளியிடப்பட்டது. JRG புரொடக்ஷன்ஸ் சார்பில் N. ஜீவானந்தம் தயாரித்த இந்தப் படத்தில் நிவாஸ் ஆதித்தன், ஈஸ்தர் நொரனா, அபினய் கிங்கர், ஆத்விக் ஜலந்தர் முதலியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். பெரும்பாலும் ஒரே இடத்தில் அமைக்கப்பட்ட இந்தக் கதை, ஒரு நாள் முழுவதும் போதை, கடன் மற்றும் உளவியல் முறிவு ஆகிய கருப்பொருள்களை மையமாகக் கொண்டு திரைக்கதை பயணிக்கிறது.ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்படும் உடனடி திருப்தியில் இன்பம் காணும் வேலையில்லாத டேனியலைப் சுற்றிப் படம் நகர்கிறது. ஒரு சாதாரண நாளில், அவரது மனைவியும் குழந்தையும் வெளியில் சென்றிருக்கும்போது, டேனியலின் அன்றாட வழக்கமான சூதாட்டத்தின் போது, அவரது வீட்டு வாசலில் ஒரு கூர்மையான, விவரிக்க முட...
சித்திரம் பேசுதடி 2 விமர்சனம்

சித்திரம் பேசுதடி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
2006 ஆம் ஆண்டு, மிஷ்கின் இயக்குநராக அறிமுகமான ‘சித்திரம் பேசுதடி’ படத்தினைத் தயாரித்தவர்கள் “உலா” எனும் படத்தை ஆறு வருடங்களுக்கு முன் தொடங்கினார்கள். 2013 இல், படத்தின் தயாரிப்பாளரான ஸ்ரீகாந்த் லக்ஷ்மன், ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’க்காக விளையாடிய ட்வெயின் பிராவோவை, ஒரு பாடல் காட்சிக்காக ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது. சாஜன் மாதவின் இசையில் ‘டல்மேனி டல்மேனி டகுல் காட்டுது’ என்ற பாடலிற்கு, வேட்டி கட்டிக் கொண்டு ட்வெயின் பிராவோ ஆடும் நடனம் நன்றாக இருக்கிறது. திரையில் உலா வர வாய்ப்புக் கிடைக்காமல் இத்தனை காலம் கிடப்பில் இருந்த படம், ‘சித்திரம் பேசுதடி 2’ ஆகப் பெயர் மாற்றம் பெற்றுத் திரையேறுகிறது. விதார்த், அஜ்மல், அஷோக், நந்தன் லோகநாதன், நிவாஸ் ஆதித்தன் என ஐந்து பிரதான பாத்திரங்கள். 48 மணி நேரத்தில், இந்த ஐந்து பேருக்கும் நடக்கும் நிகழ்வுகள் தான் படத்தின் மையக்கரு. பிரதான பாத்திரங்கள் மட்டும...