
குமரி மாவட்டத்தின் ‘தக்ஸ் (THUGS)’ – பிருந்தா மாஸ்டர்
நடன இயக்குநராகத் திரையுலகில் புகழ்பெற்ற பிருந்தா மாஸ்டர் இயக்கும் புதிய ஆக்ஷன் திரைப்படத்திற்கு 'தக்ஸ் (THUGS)' எனப் பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனைத் தமிழ்த்திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களான 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, நிவின் பாலி, ஆர்யா, ராணா டகுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், தேசிங் பெரியசாமி, இசையமைப்பாளர் அனிரூத் ரவிச்சந்திரன், திரையுலக வணிகத்தைத் துல்லியமாக அவதானிக்கும் நிபுணர்களான பாக்ஸ் ஆபிஸ் எண்டர்டெய்மெண்ட்டைச் சேர்ந்த தரண் ஆதர்ஷ் மற்றும் ஸ்ரீதர் பிள்ளை உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் இணைந்து வெளியிட்டனர்.
'தக்ஸ் (THUGS)' என படத்தின் தலைப்புக்கு ஏற்றபடி குமரி மாவட்டத்தைக் களப்பின்னணியாகக் கொண்ட யதார்த்தமான ஒரு ஆக்சன் கதையை இயக்குகிறார் பிருந்தா மாஸ்டர். கதைக்கு ஏற்ற வகையில் நடிகர்களையும் அவரே நேரடியாக தேர்வு செய்தி...


