Shadow

Tag: புஷ்கர் – காயத்ரி

“சுழல்” பெற்ற கவனம் | நன்றி நவிழ்ந்த புஷ்கர் – காயத்ரி

“சுழல்” பெற்ற கவனம் | நன்றி நவிழ்ந்த புஷ்கர் – காயத்ரி

திரைத் துளி
அமேசான் ப்ரைம் வீடியோவின் முதல் ஒரிஜினல் தமிழ் வலைதள தொடரான 'சுழல் -தி வோர்டெக்ஸ்' எனும் தொடர் ஆறு மணி நேரத்திற்கும் மேலான எட்டு அத்தியாயங்களைக் கொண்டது. இதனைக் கண்டு ரசிக்க தங்களது பொன்னான நேரத்தைச் செலவிட்டதுடன் இந்திய திரை உலகின் முன்னணி பிரபலங்களான எஸ். எஸ். ராஜமௌலி, ஹ்ரித்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா, தனுஷ், வித்யாபாலன், சமந்தா என பலரும் தொடர் குறித்த விமர்சனங்களையும் வெளியிட்டதற்காக இந்தத் தொடரை உருவாக்கிய படைப்பாளிகள் புஷ்கர்- காயத்ரி தம்பதியினர் நன்றி தெரிவித்திருக்கிறார்கள். புஷ்கர் மற்றும் காயத்ரியின் இலட்சிய படைப்பாக உருவானது தான் 'சுழல் -தி வோர்டெக்ஸ்' எனும் தொடர். இந்தத் தொடர் கண்ணைக் கவரும் காட்சிகளுக்காகவும், பரபரப்பான திரைக்கதைக்காகவும், வித்தியாசமான கதைகளத்திற்காகவும் உலகம் முழுவதும் விரும்பப்படுகிறது. இந்தத் தொடரைப் பற்றி இணையவாசிகள் மட்டுமல்லாமல் முன்னணி பாலிவுட் நட்சத்...
விக்ரம் வேதா விமர்சனம்

விக்ரம் வேதா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படத்தின் தலைப்பு போடும் முன்பே படம் என்ன மாதிரியான ஜானர் என 2-டி அனிமேஷன் மூலம் கோடிட்டுக் காட்டிவிடுகின்றனர் புஷ்கர் - காயத்ரி. அந்த 2டி குறும்படத்தில், வேதாளம் விக்கிரமாதித்யன் தோளைச் சுற்றிக் கொண்டு, ஒரு கதையைச் சொல்லவா எனக் கேட்கிறது. வேதா எனும் ரெளடி புதிர் போட, காவல்துறை அதிகாரி விக்ரம் அதை எவ்வாறு அவிழ்க்கிறார் என்பதுதான் படத்தின் கதை. படத்தின் முதல் பாதி விறுவிறுப்பு ஆச்சரியமூட்டுகிறது. முதல் ஃப்ரேமிலேயே கதை தொடங்கி விடுகிறது. சின்னச் சின்ன வசனங்களிலும் ஆழமாய்ப் புதிராயும் கதை பொதிந்துள்ளது. படம் முடியும் பொழுதுதான், படத்தின் அனைத்துக் காட்சியும் ஒன்றோடு ஒன்று எப்படிப் பின்னிப் பிணைந்துள்ளது எனத் தெரியும். மாதவன் தனது நேர்த்தியான நடிப்பால் கட்டுக்கோப்பாய் ரசிகர்களைப் பிரமிக்க வைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அசத்தலாக அறிமுகமாகிறார் விஜய் சேதுபதி. மாதவனின் நேர்த்தியை ரசிப்...