Shadow

Tag: பொன் பார்த்திபன்

காற்றின் மொழி விமர்சனம்

காற்றின் மொழி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'தும்ஹாரி சுலு' எனும் ஹிந்திப் படத்தின் மறு உருவாக்கமாக வந்துள்ளது 'காற்றின் மொழி' திரைப்படம். சுலோச்சனாவாக நடித்த வித்யாபாலனின் பாத்திரத்தில் விஜயலக்‌ஷ்மியாக ஜோதிகா நடித்துள்ளார். நாயகியை மையப்படுத்திய படமாக ஜோதிகா தேர்ந்தெடுத்து நடிப்பது சிறப்பு. ஒரே மாதிரியான அம்சம் பொருந்திய கதைகளிலேயே உழலாமல், ஜோதிகாவைப் போல், முன்னணி நாயகர்களும் படத்தைத் தேர்ந்தெடுத்தால் எப்படியிருக்கும்? பன்னிரெண்டாம் வகுப்பு தேறாத விஜியலக்‌ஷ்மிக்கு எதிர்பாராத விதமாக ஹலோ எஃப்.எம்.-இல் ஆர்ஜே-வாக (RJ - Radio Jockey) வேலை கிடைக்கிறது. அதனால் அவர் குடும்பத்தில் என்ன சிக்கல்கள் எழுகிறது என்றும், அதை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதும்தான் படத்தின் கதை. ராதாமோகனின் ஆஸ்தான நடிகர்களான எம்.எஸ்.பாஸ்கரும், குமரவேலும் படத்தில் உள்ளனர். மொழி படத்தினைப் போலவே எம்.எஸ்.பாஸ்கருக்கு ஓர் அழுத்தமான பாத்திரம். மூலக்கதையில், ஒரு காட்ச...
உப்பு கருவாடு விமர்சனம்

உப்பு கருவாடு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சினிமாவைத் தவிர வேறொன்றினை அறியாத சந்திரனுக்கு, படம் இயக்க காசிமேடு தயாரிப்பாளர் ஒருவர் கிடைக்கிறார். பல சிக்கில்களுக்கு மத்தியில், சந்திரனால் அந்தப் படத்தை இயக்க முடிந்ததா இல்லையா என்பது தான் படத்தின் கதை. ராதாமோகனின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவரான குமரவேல் தான் படத்தின் நாயகன். அவர் பீடி பிடித்துக் கொண்டே முதற்பாதி படத்தில் பட்டும் படாமலும் திரையில் தோன்றினாலும், இரண்டாம் பாதியில் ஒட்டுமொத்த படத்துக்கே தான் தான் நாயகனென கருணாகரனை மிக இலகுவாக முந்தி விடுகிறார். மாஞ்சா என்ற அந்தக் கதாபாத்திரத்தின் பலம், அது பிரதிபலிக்கும் சாமானிய முகமே! சாமானியர்களை சினிமா எவ்வளவு கவர்கிறது என்பதற்கும், சினிமாவில் ஒரு வாய்ப்பு கிடைத்தால் தங்கள் திறமையை வெளிக்காட்டிக் கொள்ள எந்த எல்லைக்குப் போவார்கள் என்பதற்கும் அந்தப் பாத்திரம் ஒரு சான்று. மொழி படத்தில் எம்.எஸ்.பாஸ்கரை குணசித்திர வேடத்தில் நடிக்க வைத்து...