
Birbal Trilogy: Case 1 Finding Vajramuni விமர்சனம்
சமீபமாகக் கன்னடத்தில் வெளிவந்த சிறந்த இன்வஸ்டிகேடிவ் த்ரில்லர் என தைரியமாக இப்படத்தினைச் சொல்லலாம். கடைசி வரைக்கும் யார் உண்மையான கொலையாளி எனத் தீர்மானிக்க முடியாமல் யோசிக்க வைப்பதிலேயே இயக்குநர் வெற்றி பெற்றுவிடுகிறார்.
ஒரு கொலை நடக்கிறது, அதனைப் பற்றிச் சொன்னவன் தான் குற்றவாளி என காவல்துறையினர் கைது செய்கின்றனர். நீதிமன்றத்தில் தீர்ப்பாகி எட்டு வருடங்கள் சிறையில் இருந்துவிட்டு ஜாமீனில் வெளி வருகிறான்.
இதனிடையில் ஒரு சட்ட நிறுவனம் சமுதாயத்தில் நற்பெயர் எடுக்க வேண்டி, ஏழை மக்களது வழக்குகளை இலவசமாக நடத்த முடிவெடுக்கிறது. அப்பொழுது அங்கு வேலைக்குச் சேரும் மகேஷ் தாஸ் என்பவன் இந்த வழக்கை எடுக்கிறான்.
எட்டு வருடங்களுக்கு முன்பு நடந்த குற்றம் என்பதால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமான சாட்சிகள் எதுவும் கிடைக்காத நிலையில் மகேஷ் தாஸ் பூஜ்ஜியத்தில் இருந்து வழக்கைத் தொடங்குகிறான். படம் பார்...


