Shadow

Tag: யுவராஜ்

“நீ நடி கண்ணா!” – With Love ரஜினிகாந்த் | அபிஷன் ஜீவிந்த்

“நீ நடி கண்ணா!” – With Love ரஜினிகாந்த் | அபிஷன் ஜீவிந்த்

சினிமா, திரைச் செய்தி
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் (With Love)” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான், “அபிஷன் ஒரு தூய மனம் கொண்டவர். அவர் மாறாமல் அப்படியே இருக்க வேண்டும். சௌந்தர்யா அக்காவின் பெயருக்கு பக்கத்தில் என் பெயர் வருவதையே நான் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் நினைக்கிறேன். வித் லவ் படத்திற்கு முன் நீங்கள் பார்த்த சௌந்தர்யா அக்கா, இந்தப் படத்திற்கு பிறகு நீங்கள் பார்க்கும் சௌந்தர்யா அக்காவிலிருந்து வேறுபட்டவராக இருப்பார். அபிஷந்திற்குள் இருந்த ஒரு insecurity-யை மாற...
“With Love: அனஸ்வராவின் நடிப்பிற்கு விசில் அடித்தேன்” – ஷான் ரோல்டன்

“With Love: அனஸ்வராவின் நடிப்பிற்கு விசில் அடித்தேன்” – ஷான் ரோல்டன்

சினிமா, திரைச் செய்தி
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் (With Love)” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. நடிகர் மணிகண்டன், “நான் இரண்டு நாள் முன்னால் இந்தப் படத்தை பார்த்தேன். உண்மையிலேயே படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம், இதோட சிம்பிளிஸிட்டி. சின்னச் சின்ன எமோஷன்ஸை எவ்வளவு அழகா, பிரமாண்டமா படமாக்கியிருக்காங்கன்னு பார்க்கும்போது ஆச்சர்யமா இருந்தது. பெர்ஃபார்மன்ஸ், ரைட்டிங், சினிமேட்டோகிராஃபி, எடிட்டிங் என எல்லாமே ஸ்கிரிப்ட்டுக்காக வேலை செய்திருக்கிறார்கள். எதுவுமே ஸ்கிரிப்ட்டைக் கெடுக்காமல் மிக அழகாக...
அபிஷன் – அனஸ்வரா மிக க்யூட்டான ஜோடி | With Love

அபிஷன் – அனஸ்வரா மிக க்யூட்டான ஜோடி | With Love

சினிமா, திரைச் செய்தி
Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ் (With Love)” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, “இப்படத்தின் கதையை மிக அழகாக சொன்ன மதனுக்கு நன்றி. கதை சொன்னபோது மறுக்கவே தோணவில்லை. திரையிலும் மிக அழகாக வந்துள்ளது. தயாரிப்பாளர் சௌந்தர்யா ரஜினிகாந்த் மேடம், மகேஷ் இருவருக்கும் நன்றிகள். அபிஷன், அனஸ்வரா, மற்றும் நடிகர் குழுவிற்கு நன்றி. படத்தை எடுக்கும் போது ஸ்கூல் நினைவுகள் எல்லாம் வந்தது. படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார். நடிகர் ஹரீஷ், “எனக்கு மதன் ரொம்ப நாள...
மை லார்ட் – எளிய மக்கள் மீதான அதிகார அத்துமீறல்

மை லார்ட் – எளிய மக்கள் மீதான அதிகார அத்துமீறல்

சினிமா, திரைத் துளி
சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மை லார்ட் (My Lord)’ எனும் திரைப்படம், பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தத் திரைப்படத்திற்குப் பாடலாசிரியர் யுகபாரதி பாடல்களை எழுத, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை முனி பால்ராஜ் மேற்கொள்ள, படத்தொகுப்புப் பணிகளை சத்யராஜ் நடராஜன் கவனிக்கிறார். டி.ஆர்.பூர்ணிமா ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்ற, நடனத்தை எம்.ஷெரீப்பும், சண்டைக் காட்சிகளை பி.சி. ஸ்டன்ட்டும் அமைக்கிறார்கள். அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சுரண்டலை சட்டயர் (Satire) பாணியில் விவரிப்பதுடன் ஃபேமிலி என்டர்டெய்னராகவும் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். இதனை அம்பேத்குமார் வழங்குகிறார். இதனைத் தமிழகம் முழுவதும் ஸ்ரீ குமரன் ஃபில...
சிறைக்குப் பின் ராவடி | L.K. அக்‌ஷய் குமார்

சிறைக்குப் பின் ராவடி | L.K. அக்‌ஷய் குமார்

சினிமா, திரைத் துளி
பஸில் ஜோசப், L.K. அக்‌ஷய் குமார் ஆகிய இருவரின் நடிப்பில் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் நேரடியாக உருவாகி வரும் 'ராவடி' எனும் திரைப்படம், மலையாளத்திலும் அதே பெயரில் தயாராகி வருவதுடன், இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகி வரும் 'ராவடி' எனும் திரைப்படத்தில், சிறை நாயகன் L.K . அக்‌ஷய் குமார், ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக், நோபல் K. ஜேம்ஸ், அருணாச்சலேஸ்வரன் PA, ஷாரீக் ஹாஸன், நடிகை ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இவர்களுடன் மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பஸில் ஜோசப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்து வரும் இந்தத் திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்...
மம்மூட்டி, மோகன்லால் நடிக்கும் ‘பேட்ரியாட்’

மம்மூட்டி, மோகன்லால் நடிக்கும் ‘பேட்ரியாட்’

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை உருவாக்கத் தயாராக இருக்கும் "பேட்ரியாட்" படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி அட்டகாசமான போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பிரம்மாண்டமான படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கும் போஸ்டரை, 40-க்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். மகேஷ் நாராயணன் இயக்கத்தில், மம்மூட்டி மற்றும் மோகன்லால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த மல்டி-ஸ்டாரர் திரைப்படம், 2026 ஏப்ரல் 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தின் தமிழ்ப் போஸ்டரை அட்லீயும், தெலுங்குப் போஸ்டரை விஜய் தேவரகொண்டாவும், ஹிந்திப் போஸ்டரை கரண் ஜோர்ரும் வெளியிட்டனர். மலையாளத்தில், துல்கர் சல்மான், பிரித்விராஜ் சுகுமாரன், டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, உன்னி முகுந்தன், பாசில் ஜோசப், ஜெயசூர்யா, சன்னி வேய்ன், நஸ்லென், நஸ்ரியா நசீம், கீர்த்தி சுரேஷ்...
சிறை விமர்சனம் | Sirai review

சிறை விமர்சனம் | Sirai review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இந்த வருடத்தின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது சிறை திரைப்படம். வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரியின் முதற்படத்திலேயே அழுத்தமான முத்திரையைப் பதித்துள்ளார். வேலூர் சிறையில் இருக்கும் அப்துல் ரெளஃப் எனும் கைதியை சிவகங்கை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கிறார் கதிரவன் எனும் போலீஸ் ஏட்டு. அந்தப் பயணத்தின் வாயிலாக, நீதித்துறையின் போதாமைகள், அழுத்தமான காதல் கதை, போலீஸார்க்கு நேரும் சங்கடம், கொம்பு முளைத்தது போல் பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் போலீஸாரின் ஆணவப்போக்கு என அழுத்தமான கதை சொல்லியுள்ளார் இயக்குநர். அப்துல் ரெளஃபாக L.K.அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித் குமாரின் மகனாவார். இவரை சினிமாவில் அறிமுகப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட படமிது. அதற்காக லலித் குமார், டாணாக்காரன் தமிழிடம், விசாரணை போலொரு கதை கேட்டுள்ளார். தமிழ் சொன்ன உண்மைக...
சிறை | வெளியீட்டுக்கு முன்பே காரைப் பரிசாக வாங்கிய இயக்குநர்

சிறை | வெளியீட்டுக்கு முன்பே காரைப் பரிசாக வாங்கிய இயக்குநர்

சினிமா, திரைச் செய்தி
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை” ஆகும். வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிறை படத்தின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், பட வெளியீட்டுக்கு முன்னதாகவே செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பாளர் SS லலித் குமார் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி அவர்களுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றைப் பரிசாக வழங்கினார். டாணாக்காரன் இயக்குநர் தமிழ், “லலித் சார் என்னிடம் விசாரணை மாதிரி ஒரு படம் செய்ய வேண்டும் என்றார். அவர் நினைத்திருந்தால் அவர் மகனை எப்படி வேண்டுமானாலும் ஒரு படத்தில் நடிக்...
Indian Film Market – இந்திய சினிமாவின் எதிர்காலம்

Indian Film Market – இந்திய சினிமாவின் எதிர்காலம்

சினிமா, திரைத் துளி
இந்தியத் திரைப்படத் துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்திச் செய்யும் வகையில்  உருவாக்கப்பட்டிருக்கும் புரட்சிகரமான  புதிய தளமாக இந்தியன் ஃபிலிம் மார்க்கெட் (Indian Film Market) தளம் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளது. பல தசாப்தங்களாகப் படைப்பிலிருந்து திரைக்கு, அதைத்தாண்டி திரைப்படத் துறைக்கு ஆதரவாக ஒருங்கிணைந்த ஒரு சூழலை உருவாக்க வேண்டிய அவசியம் இருந்து வந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில் தான்  இந்தியன் ஃபிலிம் மார்க்கெட் தளம் உருவாகியுள்ளது. இந்த முன்னோடியான முயற்சியின் தலைமைச் சிந்தனையாளர் திரு. கண்ணன் (நிறுவனர், இந்தியன் ஃபிலிம் மார்க்கெட்)  தயாரிப்பு, விநியோகம், திரையரங்க மேலாண்மை, மேலும் முன்னணி மீடியா நிறுவனங்களில் 28 ஆண்டுகால தலைமைப் பொறுப்புகளில் அனுபவம் பெற்றவர். இந்தியத் திரைப்படத் துறையின் சவால்களையும், அதில் உள்ள வாய்ப்புகளையும் ஆழமாகப் ...
GrandFather – முழுமையான கமர்ஷியல் என்டர்டெயினர்

GrandFather – முழுமையான கமர்ஷியல் என்டர்டெயினர்

சினிமா, திரைத் துளி
குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர், ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் நடிப்பில் தயாராகி வரும்' கிராண்ட் பாதர் (GRAND FATHER)’ ஃபேன்டஸி எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது. ஃபேன்டஸி, ஸ்டைலிஷ் ஆக்ஷன், உணர்ச்சிபூர்வமான டிராமா, திகில் நிறைந்த ஹாரர் காட்சிகள், அசத்தலான நகைச்சுவை என எல்லாம் சேர்ந்து, ஒரு முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னர் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது. ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்குநராகவும் இப்படத்தில் அறிமுகமாகிறார். தெலுங்கு நடிகர் சுனில், ஸ்மீகா,அருள் தாஸ், முனீஸ்காந்த், ஸ்ரீநாத், சிவா அரவிந்த், பிரியதர்ஷினி, மைம் கோபி, ஹரீஷ் பேரடி, மெட்ராஸ் ரமா , பிபின் குமார் அஞ்சலி ராவ், அபிநயா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளார்கள். மேலும் இப்படத்தில் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான முன்னணி நட்சத்திர நடிகர்கள்...
“தர்மம் வெல்லும்!” – நலன் குமாரசாமி | வா வாத்தியார்

“தர்மம் வெல்லும்!” – நலன் குமாரசாமி | வா வாத்தியார்

சினிமா, திரைச் செய்தி
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்” ஆகும். இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வினில் பேசிய இயக்குநர் நலன் குமாரசாமி, “9 வருடம் கழித்து படம் எடுக்கிறார் என பில்டப் போஸ்ட் எல்லாம் பார்த்தேன். ஆனால் நியாயமாய் நீங்கள் பயப்பட வேண்டும். இவ்வளவு வருடம் படமெடுக்காமல் படமெடுக்க வருகிறானே என யோசிக்க வேண்டும். சூது கவ்வும் படமெடுத்த போது, எஸ்.ஆர். பிரபு ரொம்ப வருத்தப்பட்டார், சிவக்குமார் ஐயாவும் ரொம்பவும் வருத்தப்பட்டார். இப்படி தலைப்பு வைத்துப் படமெடுக்கலாமா எனக் கேட்டார்கள். அது வெறும் கிண்டல் தான் என்றேன், இருந்தாலும் அப்போது ஒரு வாக்குறுதி தந்தேன். தர்மம் வெல்லும் என...
“எம்.ஜி.ஆர் தந்த கர்லாக்கட்டை” – ஆனந்த்ராஜ் | வா வாத்தியார்

“எம்.ஜி.ஆர் தந்த கர்லாக்கட்டை” – ஆனந்த்ராஜ் | வா வாத்தியார்

சினிமா, திரைச் செய்தி
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்” ஆகும். இப்படம் வரும் டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. ஜி.எம்.சுந்தர், “இந்த மாதிரி மேடை ஏற எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளேன் என்று எனக்குத் தான் தெரியும். இந்தப்படத்தில் வாத்தியார் இருக்கிறார், அவர் பற்றி நான் சொல்லத் தேவையில்லை. வாத்தியார் பற்றி சத்யராஜ் சார் பேசிக்கொண்டே இருப்பார். அப்படி ஒரு அற்புதமானவரின் ரோலைக் கார்த்தி சார் செய்துள்ளார். அந்த பாடி லாங்குவேஜ், அந்த பாவனை எல்லாம் அப்படியே கார்த்தி சார் செய்துள்ளார். ஞானவேல் சார் உங்கள் தயாரிப்பில் இரண்டாவது படம் செய்கிறேன். நலன் "காதலும் கடந்து போகும்" படத்தில் இரண்டாவது இன்னிங்ஸ் தந்தார். அவருக்க...
படையப்பா – மீண்டும் 4K தரத்தில் பராக் பராக்

படையப்பா – மீண்டும் 4K தரத்தில் பராக் பராக்

சினிமா, திரைத் துளி
தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 50 வருட பொன்விழாவைக் கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி அன்று, 1999 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “படையப்பா” திரைப்படம் 4K தரத்தில் புத்தம் புதுப்பொலிவுடன் மீண்டும் திரைக்கு வருகிறது. தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது திரைத்துறையில் 50 ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளார். இந்தியா மட்டுமல்லாது ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரும் ஸ்டாராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கொண்டாப்படுகிறார். அவரின் பொன் விழா ஆண்டைக் கொண்டாடும் வகையில், பிளாக்பஸ்டர் திரைப்படமான “படையப்பா” படம் மீண்டும் திரையில் வெளியிடப்படவுள்ளது.இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான “படையப்பா” படத்தில் சூப்பர் ஸ்டாருடன் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இணைந்து நடித்திருந்தார். சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், மணிவண்ணன், அப்பாஸ் எ...
“மெட்ராஸ் என் ஜென்ம பூமி” – நந்தமூரி பாலகிருஷ்ணா | Akhanda 2

“மெட்ராஸ் என் ஜென்ம பூமி” – நந்தமூரி பாலகிருஷ்ணா | Akhanda 2

சினிமா, திரைச் செய்தி
"மெட்ராஸ் என் ஜென்ம பூமி; தெலுங்கானா என் கர்ம பூமி; ஆந்திரா என் ஆத்ம பூமி."- பாலய்யாதமிழ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், அகண்டா 2: தாண்டவம் படத்தின் தெலுங்குப் பதிப்போடு இணைந்து தமிழ்ப் பதிப்பும் வரும் டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ்ப் பதிப்பின் வெளியீட்டை ஒட்டிப் படக்குழுவினர் சென்னையில் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். நந்தமூரி பாலகிருஷ்ணா, “அகண்டா முதல் பாகம் வெளிவந்த போது இப்படம் பார்க்க ஆள் வருமா என நினைத்தோம். ஆனால் இம்மாதிரி படம் ரசிகர்களுக்குக் கண்டிப்பாகத் தர வேண்டும் என உருவாக்கினோம். அது சூப்பர் ஹிட்டானது. இம்மாதிரி படங்களை ரசிகர்கள் பார்க்கிறார்கள் என தைரியம் வந்தது, போயபாடி ஶ்ரீனுவுடன் எனக்கு நாலாவது படம். எல்லாமே சூப்பர் ஹிட். அவருடன் கதை கூட அவ்வளவாக விவாதிக்க மாட்டேன். இந்தப் படம் 130 நாட்களில் முடிந்த விட்டது. இது சீக்குவல் இல...
வா வாத்தியார் | சந்தோஷ் நாராயணன் தனது அம்மாவுடன் இணைந்து பாடிய வைரல் வீடியோ

வா வாத்தியார் | சந்தோஷ் நாராயணன் தனது அம்மாவுடன் இணைந்து பாடிய வைரல் வீடியோ

Teaser, காணொளிகள், சினிமா, திரைத் துளி
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் “வா வாத்தியார்” ஆகும். இப்படத்தின் வெளியீட்டு வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்திலிருந்து டீசர், பாடல்கள், ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களை உற்சாப்படுத்தி வருகிறது. இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், சமூக வலைத்தளத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது அம்மாவுடன் சேர்ந்து பாடிய பாடல் வீடியோ வைரலாகி வருகிறது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ்பெற்ற பாடலான, ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்’ பாடலைத் தனது அம்மாவுடன் சேர்ந்து ரீமிக்ஸ் செய்து பாடியுள்ளர். இந்த வீடியோவில் நடிகர் கார்த்தி சந்தோஷ் நாரயாணனின் அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்துப் பதிவிட்டுள்ளார்...