
மன நலத்தில் யோகாவின் பங்கு
நியூரோக்ரிஷ் ஏற்பாடு செய்திருந்த, ‘தி புத்தி இம்மெர்ஷன் (The Buddhi Immersion)’ எனும் இண்டோ-ஜப்பான் வொர்க்-ஷாப்பில், ‘மூளை, மனம் மற்றும் ஒருங்கிணைந்த மருத்துவம்’ என்ற கருத்தரங்கம் நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகள் நிகழ்ந்தன. இந்தியா முழுவதிலிருந்தும், ஜப்பானிலிருந்தும் பிரபலமான மருத்துவர்கள் கலந்து கொண்டு, பக்கவாதம், மூளைத்தேய்வு, பார்க்சின்சன், கைகால் இழுப்பு நோய், மன அழுத்தம், மனக்கலக்கம், மனப்பிறழ்வு, மற்றும் பல உளநோய்கள், அவற்றின் மருத்துவ முறைகள் குறித்து விவாதித்தனர்.
‘பண்டைய ஞானத்துடன் கூடிய நவீன மருத்துவம்’ குறித்த அனுபவத்தை, தி புத்தி இம்மெர்ஷன் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கியது. பல்வேறு கலாச்சாரங்களின் குறுக்காக, மூளை மற்றும் மனதின் இடைப்பரப்பில் உள்ள சவால்கள் மற்றும் தீர்வுகளைப் பற்றியும் விவாதம் அரங்கேறியது. அறிவியல், மருத்துவ அனுபவம், உளவியல், தத்துவம், சமூகவியல், மெஞ்ஞானம் எ...


