Shadow

Tag: ருக்மிணி வசந்த்

Kantara: Chapter 1 விமர்சனம்

Kantara: Chapter 1 விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
காந்தாரா படத்தின் ப்ரீக்வலாக சாப்டர் 1 வந்துள்ளது. முந்தைய படத்தில், பூதகோலா ஆட்டத்தில் நாயகனின் தந்தை மறைந்த இடத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி இப்படத்தின் கதை விவரிக்கிறது. காந்தாராவிலுள்ள ஈஸ்வரன் பூந்தோட்டம் எனும் காட்டை ஈஸ்வர கணங்களே பாதுகாக்கின்றன. அங்கு விளையும் மிளகு, பாங்காரா தேசத்து மன்னனை ஈர்க்கிறது. அமானுஷயச் சக்திகளால் பாங்காரா தேசத்து மன்னன் கொல்லப்படுகிறான். காந்தாராவிலுள்ள ஒரு கிணற்றில் பெர்மி (Bermi) கண்டெடுக்கப்படுகிறான். அவன் இளைஞன் ஆனதும், எல்லா மக்களும் சமம் என்ற கருத்தில் ஊன்றி, பாங்காரா தேசத்து துறைமுகத்தை வரிகளற்று அனைவருக்கும் திறந்துவிடுகிறான். அவனது செய்கையால் கோபப்படும் குலசேகரன் எனும் பாங்காரா மன்னன் (காந்தாராவில் கொல்லப்பட்டவரின் பேரன்), காந்தாராவைத் தீக்கிரைக்காகிறான். கடவுள்களால் பாதுகாக்கப்படும் காந்தாராவின் எதிர்வினைதான் படத்தின் முடிவு. கனகவதியாக ருக்மிணி...
மதராஸி விமர்சனம் | Madharaasi review

மதராஸி விமர்சனம் | Madharaasi review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
துப்பாக்கிக் கலாச்சாரத்தை தமிழ்நாட்டிற்குள் அறிமுகப்படுத்த நினைக்கிறது ஒரு வலுவான குழுமம் (syndicate). அதைத் தடுக்க நினைக்கிறார் NIA அதிகாரியான ப்ரேம். அவரது முயற்சியில், அவருக்குத் துருப்புச் சீட்டாகக் கிடைக்கிறார் ரகு ராம். குழுமத்தைச் சென்னைவாசியான (மதராஸி) ரகு தடுத்தானா இல்லையா என்பதே படத்தின் முடிவு. தனது வெற்றி சூத்திரங்கள் அனைத்தையும் இப்படத்தின் திரைக்கதையில் பிரயோகித்துள்ளார் ஏ.ஆர். முருகதாஸ். கஜினியில் நாயகன்க்குக் குறுகிய 'கால நினைவாற்றல் இழப்பு (Short term memory loss)' இருப்பது போல், மதராஸியில் நாயகனுக்குத் 'திரிவரண்மை ஒழுங்கின்மை (Delusional disorder)' இருக்கிறது. அவர் மனம் உருவகித்துக் கொள்ளும் மாய தோற்றங்கள், எத்தகைய சூழலில் எழும் என்பதற்கு ஓர் அழகான நினைவோடை (flash-back) காட்சியையும் வைத்துள்ளார் முருகதாஸ். துப்பாக்கி படத்தின் இடைவேளை காட்சி போல், சிவகார்த்திகேயன் வில்லன்...
ஏஸ் விமர்சனம் | Ace review

ஏஸ் விமர்சனம் | Ace review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சீட்டுக்கட்டு விளையாட்டில், மிகக் குறைந்த மதிப்பும், அதே சமயம் அதிக மதிப்புமிக்க சீட்டாக ஏஸ் கருதப்படுகிறது. மனிதர்களைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, ஒரு கடினமான சவாலைத் தனது இடு இணையற்ற திறமையால் முடிக்கும் நபரைச் சுட்டுகிறது. குற்றப் பின்னணியுடைய நபர், மலேஷியாவிற்குச் செல்கிறார். பிரச்சனைகளில் சிக்காமல் அமைதியான வாழ நினைப்பவரைப் போல்ட் கண்ணன் எனக் கருதி வேலையில் சேர்த்து விடுகிறார் அறிவுக்கரசன். கண்ணன்க்கு வேலை கொடுத்த கல்பனாவிற்கு வங்கியில் கடன் சிக்கல், கண்ணனின் காதலி ருக்மிணிக்கு வேலையில் நீட்டிக்கவும், சொந்த வீட்டைத் தக்கவைத்துக் கொள்ளவும் பணம் தேவைப்படுகிறது. அதற்காக போக்கர் விளையாடி பணம் ஈட்ட நினைக்கிறார் போல்ட் கண்ணன். ஆனால், அப்போட்டியை நடத்தும் தர்மா, விளையாட்டில் அவர்களை ஏமாற்றி கடவுச்சீட்டைப் பிடுங்கிக் கொள்வதோடு, கொடுத்த கடனை வட்டியோடு அடைக்கும்படி மிரட்டுகிறார். இந்த அனைத்து...