Shadow

Tag: ரோஹின் வெங்கடேசன்

நந்தன் | மண்ணின் வேதனையைப் பதிவு செய்த சினிமா

நந்தன் | மண்ணின் வேதனையைப் பதிவு செய்த சினிமா

சினிமா, திரைச் செய்தி
இரா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலைப் பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன் ஆகும். செப்டம்பர் 20 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் ட்ரெய்லர் - இசை வெளியீட்டு விழா கோலாகலமாகச் சென்னையில் நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜை இந்தப் படத்திற்காக யோசித்து வைத்திருந்தார் இயக்குநர் இரா. சரவணன். அவரில்லாத பட்சத்தில், அவருக்கு நிகரான ஒருவர் வேண்டுமென ஒளிப்பதிவாளர் சரணை அணுகியுள்ளார் இயக்குநர். ஒளிப்பதிவாளர் சரண், " 'கிடாயின் கருணை மனு', 'விழித்திரு' திரைப்படங்களில் மட்டுமே பணியாற்றி இருந்தேன். அதைப் பார்த்துவிட்டு, என்னை அழைத்து இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பபை அளித்தார். அவருக்கு என் நன்றிகள். ...
தீராக்காதல் விமர்சனம்

தீராக்காதல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பிரிந்த காதல் என்பது ஒருவழிப்பாதை. அதில் திரும்ப முடியாது. அப்படியே முடிந்தாலும், ‘திரும்பக் கூடாது’ என்பதைப் பேசுகிறது தீராக்காதல் திரைப்படம். கொஞ்சம் விட்டுவிட்டு என்றாலும், இன்ப நிழலாடும் வீட்டிற்குள் திடீரென புயல் அடித்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு புயலைச் சந்திக்கிறார் நாயகன் ஜெய். மனைவி ஷிவதா, மகள் ஆர்த்தி, நல்ல மரியாதையும் சம்பளமும் உள்ள வேலை என நிறைவான வாழ்வை வாழ்ந்து வருகிறார் ஜெய். அலுவலக வேலையாக ஒருமுறை ரயில் பயணம் மேற்கொள்கிறார். அந்தப் பயணத்தில் தனது முன்னாள் காதலியான ஐஸ்வர்யா ராஜேஷைச் சந்திக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் தனது மண வாழ்வுப் பிரச்சனைகளை ஜெய்யிடம் சொல்கிறார். அதன் பிறகு அவர்களின் உறவு எந்த அளவிற்கு வளர்கிறது, அதன் பின் இருவர் வாழ்விலும் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன எனப் பயணிக்கிறது படம். கதாபாத்திரங்களின் உணர்வுகள் வழியாக ரசிகனுக்குக் கதையை உணர்த்த வேண்டிய பொறுப்...