
மெட்ராஸ் மேட்னி விமர்சனம் | Madras Matinee review
எழுத்தாளர் ஜோதி ராமய்யாவிற்கு, நடுத்தர வர்க்கத்தைப் பற்றி நாவல் எழுதவேண்டுமெனப் பிரியப்படுகிறார். அந்தத் தேடலில், டாஸ்மாக்கில் சந்திக்கும் கண்ணன் எனும் ஆட்டோ ஓட்டுநரின் வாழ்க்கையைப் பின்தொடர்கிறார். கண்ணன், அவரது குடும்பம், அவரது வாழ்க்கைப் பாடுகள், அவரது மகள் தீபிகா, மகன் தினேஷ், மனைவி கமலம் என ஒரு குடும்பத்தின் நெகிழ்ச்சியான கதை தான் மெட்ராஸ் மேட்னி படத்தின் கதையும்.
கட்சி விட்டுக் கட்சி தாவும் அரசியல்வாதி பச்சோந்தி பிரேமாவாகக் கீதா கைலாசம் நடித்துள்ளார். அம்மா பாத்திரங்களில் மட்டும் சிக்கிக் கொள்ளாமல், கலகலப்பான பாத்திரங்களிலும் முத்திரையைப் பதிப்பது சிறப்பு. அவரது உதவியாளராக விஜய் டிவி ராமர் தோன்றியுள்ளார். நகைச்சுவைக்கு உதவாவிட்டால் கூடப் படத்தில் ஒரு பாத்திரமாகப் பொருந்திப் போகிறார். பொதுவாகத் திரைப்படங்களில் அவர்க்கு இது போல் நிகழாது.
தினேஷாக நடித்துள்ள விஸ்வாவும், தீபிகாவாக நடித்...



