Shadow

Tag: ஸ்வாகதா

காயல் விமர்சனம் | Kaayal review

காயல் விமர்சனம் | Kaayal review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
காயல் – காய்தல் – வாடுதல் திருமதி தேன்மொழி தற்கொலை புரிந்து கொள்ள, அவரைச் சார்ந்தோர்கள் எல்லாம் துக்கத்தில் வாடுகின்றனர். அவரது மரணம் கொலையா, தற்கொலையா என்பதை ஒரு சமூக நோக்குடன் அணுகுகிறது திரைக்கதை. காயல், எழுத்தாளர் தமயந்தியின் முதற்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டிச்சேரி, பிச்சாவரம், வேளாங்கண்ணி, ராமேஸ்வரம் என படத்தின் கதை நெய்தல் திணைகளிலேயே பயணிக்கிறது. இரங்கலும், இரங்கல் நிமித்தமும் நெய்தல் திணையின் அக ஒழுக்க உரிப்பொருளாகும். இரங்கலுக்கு துக்கம், சோகம், வருத்தம் எனும் அர்த்தங்கள் வந்தாலும், இப்படத்தின் கருவான இழந்தவரை எண்ணி வருந்துதல் என்பதோடு சாலப் பொருந்துகிறது. தேன்மொழியாக காயத்ரி நடித்துள்ளார். தீமையைக் கண்டால் சீறியெழும் பெண்ணாகப் படைக்கப்பட்டிருந்தாலும், தேன்மொழி பாத்திரத்தை முடித்த விதத்தில் ஏமாற்றத்தை அளித்துள்ளார் தமயந்தி. படத்தின் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவ...
‘அடியாத்தே’ பாடலை வெளியிட்ட கெளதம் வாசுதேவ் மேனன்

‘அடியாத்தே’ பாடலை வெளியிட்ட கெளதம் வாசுதேவ் மேனன்

சினிமா, திரைத் துளி
பிரபல பின்னணி பாடகி சுவாகதா எஸ். கிருஷ்ணனின் அடியாத்தே என்ற ஒற்றை வீடியோ பாடலை முன்னணி இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் ட்விட்டரில் வெளியிட்டார். இப்பாடலை சுவாகதாவுடன் இணைந்து டி. ல்சத்திய பிரகாஷ் பாடியிருக்கிறார். கரு / தியா திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஆலாலிலோ’, பார்ட்டி திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஜிஎஸ்டி’, மற்றும் காற்றின் மொழி திரைப்படத்தில் இடம் பெற்ற ‘டர்ட்டி பொண்டாட்டி’ உள்ளிட்ட பல துள்ளலான பாடல்களைப் பாடி ரசிகர்களை வென்ற இளம் பாடகி சுவாகதா, முதன்முறையாக ஒரு ஒற்றை வீடியோ பாடலை இசையமைத்து, பாடி, நடித்து, தயாரித்தும் வெளியிட்டிருப்பதன் மூலம் ஒரு இசை வீடியோ தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார். தனது முதல் குரு திருமதி விஜயலக்ஷ்மி ராமசேஷன் எனக் கூறும் சுவாகதா, தனது சிறு வயது முதலே அவரிடம் கர்நாடக இசையைப் பயின்றிருக்கிறார். பொறியியல் பட்டதாரியான சுவாகதா இசையின் மீ...