Shadow

Tag: 007

இளம் 007

இளம் 007

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
கெட்டப்பை மாத்தி, செட்டப்பை மாத்தி, வயதைக் குறைத்து புது பொலிவுடன் 007 பாத்திரத்தைக் களமிறக்க உள்ளனர். அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை ஸ்கைஃபால் , ஸ்பெக்டர் ஆகிய படங்களிலேயே அவதானித்து இருக்கலாம். மிக இளமையான ஜேம்ஸ் பாண்ட்டாக "தியோ ஜேம்ஸ்" நடிக்கவுள்ளார். 31 வயதாகும் இவர், "என் சிறு வயது கனவிது. விஷயத்தைக் கேள்விபட்டவுடன் நாற்காலியில் இருந்து நழுவி விழப் போனேன். கனவு காண்பது போலுள்ளது" எனத் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். ஆகஸ்ட்டில் தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, அடுத்த ஆண்டு ஃபிப்ரவரியில் வெளிவரவுள்ளது. அது ஜேம்ஸ் பாண்ட் சீரிஸின் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது....
ஸ்பெக்டர் விமர்சனம்

ஸ்பெக்டர் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஸ்கைஃபாலில் விதைத்த எதிர்பார்ப்பை மிக விரிவாகப் பூர்த்தி செய்துள்ளார் சாம் மெண்டீஸ். இதுவரை பார்த்து வந்த 007 படங்களின் இலக்கணத்தை ஸ்கைஃபால் படத்தில் உடைத்திருந்தார் சாம் மெண்டீஸ் எனும் மிதவாதி. இப்படத்தில் ஜேம்ஸ் பாண்ட் படங்களின் இலக்கணத்தில் கவனம் செலுத்தியிருந்தாலும், அது அளவுக்கு மீறாமல் பார்த்துக் கொண்டுள்ளார். உதாரணத்திற்கு, வழக்கமான கார் சேஸ் (chase) படத்தில் உண்டு எனினும் அந்த அதி நவீன காரை உருக்கலைக்காமலோ, வெடித்துச் சிதற விடாமலோ நீரில் மென்மையாக மூழ்க வைக்கிறார். வில்லன் ஒரு பட்டனைத் தட்டினால் உலகமே அழிந்து விடும்; அப்பொழுது பாண்ட்.. ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைலாக வந்து உலகைக் காப்பாற்றுவார் என்ற ஒன்-லைனை, ஸ்கைஃபால் படத்தில் உடைத்தது போலவே இப்படத்திலும் உடைத்துள்ளார் மெண்டீஸ். ‘நீ எவ்வளவு பெருமைப்பட்டுக் கொண்டாலும்.. நீ ஒரு கொலைக்காரன் என்பதுதான் ஒரே நிஜம்!’ என 007 கதாபாத்திரத்தைப் பற...
ஸ்கைஃபால் விமர்சனம்

ஸ்கைஃபால் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
Bond.. James Bond. 23 படங்கள். 50 வருடங்கள். உலகை வசீகரித்துக் கொண்டிருக்கும் Ian Fleming-இன் இறவாக் கதாபாத்திரம்.ஏதாவது ஒரு நாட்டிற்குள் தனியொருவராய் நுழைந்து, வில்லனின் ஆராய்ச்சிக் கூடத்தை நிர்மூலமாக்கும் வழக்கமான  007 படமல்ல இது. ஓர் அட்டகாசமான துரத்தும் காட்சியுடன் தொடங்கினாலும் படம் முழுவதும் ஏராளமான ஆச்சரியங்கள். ஒரு சிறு துரும்பைக் கூட உடைக்காமல் படத்தின் வில்லனை கைது செய்து விடுகிறார் 007. சிறையில் இருந்து தப்பிக்கும் வில்லனின் வியூகத்தை 007 எப்படிச் சமாளிக்கிறார் என்பதுடன் படம் நிறைவுறுகிறது.டேனியல் க்ரெய்க். ஏற்கனவே இரண்டு படங்களில் ஜேம்ஸ் பான்ட்டாக நடித்திருந்தாலும்.. சீன் கேனரி, ரோஜர் மூர், பியார்ஸ் பிராஸ்னன் என முந்தைய ஜேம்ஸ் பான்ட்கள் மக்கள் மனதில் பெற்ற இடத்தைப் பெற முடியவில்லை. ஆனால் 'ஸ்கைஃபால்' மூலம் டேனியல் க்ரெய்க், தான் ஜேம்ஸ் பான்ட் பாத்திரத்திற்கு மிகப் ...