
2.0 எனும் அதி பிரம்மாண்டம்
300 கோடி பட்ஜெட்டில் தொடங்கிய படம், 550 கோடிக்கு நீண்டுவிட்டது என்கிறார் ரஜினி. ஆனாலும், படம் அதனை வசூலித்துவிடும் என்கிறார் ரஜினி மிக நம்பிக்கையுடன்.
படத்தொகுப்பாளர் ஆண்டனி, மூன்று முறை எடிட்டிங் செய்துள்ளார். ஒன்று, அனிமேஷன் வடிவிலான ப்ரீ-விஷுவலைசேஷன்; இரண்டு, விஷுவல் எஃபெக்ட்ஸ் இல்லாமல்; மூன்றாவது, விஷுவல் எஃபெக்ட்ஸ்களுடன் என மொத்தம் மூன்று முறை முழுப் படத்தையும் தொகுத்துள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அப்படியே! படம் தொடங்கும் முன் ஒருமுறை, விஷுவல் எஃபெக்ட்ஸ் இல்லாமல் மற்றொரு முறை, தற்போது, அட்டகாசமான விஷுவல் எஃபெக்ட்ஸ்களுக்கு ஈடு செய்யும் வகையில் இசையமைத்து வருகிறார்.
உலகத்திலேயே முதல் முறையாக, செளண்ட் டிசைனிங்கில் 4டி (4D - SRL) தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தியுள்ளார் ரசூல் பூக்குட்டி. உபயோகப்படுத்தியுள்ளார் என்பதை விட, உருவாக்கியுள்ளார் என்பதே சரி. தங்களது புதிய பரிமாணத்திற்கு...