சிங்கையில் ரெமோ
சிவகார்த்திகேயனும் கீர்த்தி சுரேஷும் நடித்திருக்கும் ரெமோ, 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில், புதுமுக இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ள 'ரெமோ' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரும், அனிருத் இசையமைத்த 'ரெமோ நீ காதலன்' பாடலும் கடந்த வியாழன் அன்று சென்னையில் மிக விமர்சையாக வெளியிடப்பட்டது. பிரம்மாண்டத்தின் மறு ரூபமான இயக்குநர் ஷங்கர் தலைமை தாங்கிய இந்த விழாவானது, ஒட்டுமொத்த திரையுலகக் கண்களையும் 'ரெமோ' மீது திரும்புமாறு செய்திருக்கிறது.
இப்படி ஒரு பாடலின் வெளியீட்டையே, மிகப் பிரம்மாண்டமாக வெகு விமரிசையாகக் கொண்டாடிய படக்குழுவினர், வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி சிங்கப்பூரிலும் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்த உள்ளனர். சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் இடையே வெகு பிரபலமான சிவகார்த்திகேயனுக்கு அங்கு சிறப்பான வரவேற்புக்குக் காத்துக் கொண்டிருக்கிறது. 'ரெமோ' திரைப்படத்தின் மற்றொரு பாடலான...