Shadow

Tag: Aan Devathai movie

கலைஞரின் ஆன்மா – ஆண் தேவதை

கலைஞரின் ஆன்மா – ஆண் தேவதை

சினிமா, திரைத் துளி
சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடிப்பில் இயக்குநர் தாமிராவின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் உருவான "ஆண் தேவதை" படத்தின் இசை வெளியீடு 10ஆம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாகத் தமிழினத் தலைவர் கலைஞர் இயற்கை எய்த இந்த நேரத்தில் நிகழ்ச்சி வேண்டாம் என்று படக் குழுவினர் ஒருமித்தமாகக் கூடி முடிவு செய்து உள்ளனர். இது குறித்து "ஆண் தேவதை" திரைப்படத்தின் திரையரங்கு விநியோக உரிமை பெற்ற நியூ ஆர் எஸ் எம் பிலிம் ப்ரொடக்‌ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் நிறுவனர் மாரிமுத்து கூறுகையில், "ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்துக்கு இந்தக் காலகட்டம் சோதனையானது. கலைஞர் அவர்கள் தமிழ்த்திரை உலகிற்குச் செய்த சேவைகளும் சாதனைகளும் அதிகம். 'ஆண் தேவதை' இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் மிக விமரிசையாக நடைபெற்று கொண்டு இருந்த கட்டத்தில் தான் கலைஞர் அவர்களின் மறைவு செய்தி இடி போல தாக்கியது. கடைசி நேர மாற்றம் செய்யவேண்டிய ...