ஆண்டவன் கட்டளை விமர்சனம்
லண்டனுக்குச் செல்ல டூரிஸ்ட் விசா இலகுவாகக் கிடைக்க, ட்ராவல் ஏஜென்ட்டின் அறிவுரைப்படி மணமானவர் என பொய்யான தகவலைப் பாஸ்போர்ட்டில் கொடுத்து விடுகிறார் காந்தி. பின், இந்தியாவிலேயே கிடைக்கும் வேலையைத் தக்க வைக்க, இல்லாத மனைவியின் பெயரைப் பாஸ்போர்ட்டில் இருந்து அகற்ற காந்தி படும்பாடு தான் படத்தின் கதை.
போலி ஆவணங்கள் பக்காவாக இருந்தும், காந்தி சொல்லும் ஒரே ஒரு உண்மை அவருக்கு விசா கிடைக்க விடாமல் செய்து விடுகிறது. பிறகு சொன்ன பொய்யை, சரி செய்ய நினைக்கையில் பொய்ப் பொய்யாய்ச் சொல்ல வேண்டிய நிலை உருவாகிறது. ஒரு கட்டத்திற்கு மேல், பொய்ச் சோதனையைக் காந்தியால் தாங்க முடியவில்லை. நெட்வொர்க்காய் ஏய்த்து வாழும் சாமானியர்களோடு சாமானியராய் முழி பிதுங்கும் காந்தி, ‘ஷ்ஷ்ப்பாஆஆ.. என்னை விட்டுடுங்கடா. நான் உண்மையையே பேசிச் சமாளிச்சுக்கிறேன்’ என மகாத்மாத்துவம் எய்துவது தான் படத்தின் உச்சக்கட்டம். காந்தியாக விஜய்...