Shadow

Tag: Aashirvad Cinemas

L2: எம்புரான் | Empuraan review

L2: எம்புரான் | Empuraan review

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஸ்டீஃபன் நெடும்பள்ளி, P.K.ராமதாஸின் மஹன் ஜதின் ராமதாஸைக் கேரளாவின் முதல்வராக, இப்படத்தின் முதல் பாகமான லூசிஃபரில் நியமித்திருப்பார். ஐந்தாண்டுகளில் ஊழலில் திளைக்கும் ஜதின், தன்னைத் தற்காத்துக் கொள்ள வலதுசாரி தேசியக் கட்சியான ‘அகண்ட சக்தி மோர்ச்சா (ASM)’ உடன் கூட்டணி வைக்கிறார். கடவுளின் நாடான கேரளாவைக் காப்பாற்ற ஸ்டீஃபன் நெடும்பள்ளியை அழைக்கிறார் கோவர்தன் எனும் விசில்-ப்லோயர் (Whistle blower). தேவபுத்திரனிடம் இருந்தும், பஜ்ரங்கி பாபாவிடம் இருந்தும், தெய்வத்திண்ட தேசத்தைக் காப்பாற்ற சொர்க்கத்தில் இருந்து துரத்தப்படும் லூசிஃபர் எழுந்தருள்கிறார். லூசிஃபரின் வருகையை, தலைக்கீழாக விழும் சிலுவையின் (L) மூலமாகக் குறியீடாக உணர்த்திருப்பார்கள். மேலும், கேரளக்காட்டில் பிரியதர்ஷினியைக் காப்பாற்ற சாத்தான் தோன்றி விட்டான் என்பதை, மின்னல் தாக்கி எரியும் மரத்தின் கிளை முறிந்து L வடிவில் தீப்பற்றி அம்மரம் ...
பரோஸ் – மோகன்லாலின் பிரம்மாண்ட 3டி திரைப்படம்

பரோஸ் – மோகன்லாலின் பிரம்மாண்ட 3டி திரைப்படம்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
ஆஷிர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான ‘பரோஸ்’, திவரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ரவிஸ் டாக்டர் பி.ரவி பிள்ளை இப்படத்தை வழங்குகிறார். 'டீப் ப்ளூ சீ 3', 'ஐ இன் தி ஸ்கை' மற்றும் 'பிட்ச் பெர்பெக்ட்' ஆகிய படங்களில் பணியாற்றிய பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், 'பரோஸ்' படத்திற்கு ரீ-ரெக்கார்டிங் செய்துள்ளார். இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.இந்நிகழ்வினில் பேசிய வசனகர்த்தா ஆர் பி பாலா, “மோகன்லால் சாருடன் புலிமுருகன் பணியாற்றினேன். பின்னர் இப்படத்தில் பணியாற்றியுள்ளேன். 3 வருடங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக இப்படம் ஆரம்பித்தது. நான் இதுவரை 2டியில் தான் பார்த்திருக்கிறேன். இன்று தான் இங்கு ...