
பண்டிகை மகிழ்ச்சியில் கிருஷ்ணா
கிருஷ்ணா நடிப்பில், அறிமுக இயக்குநர் பெரோஸ் இயக்கத்தில், வருகின்ற 14 ஆம் தேதி வெளி வரவுள்ள படம் பண்டிகை.
"கழுகு, யாமிருக்க பயமே போன்ற படங்கள் படம் வெளி வருவதற்கு முன்பு எனக்கு என்ன உணர்வைத் தந்ததோ, அதே உணர்வைப் பண்டிகை படமும் தருகிறது. இயக்குநர் பெரோஸ் எனக்கு நீண்ட கால நண்பர். எங்களுக்குள் உள்ள பரஸ்பர தோழமையும், புரிதலும் இந்தப் படத்தில் தெளிவாகத் தெரியும். ஒவ்வொரு விஷயத்திலும் அவர் காட்டும் கவனம், அவரது இலக்கு வெற்றி மட்டுமே என்பதைச் சொல்லும்.
சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கோர்க்கப் பட்ட இந்தக் கதை என் திரை வாழ்வில் முக்கிய படமாக இருக்கும் என்பதைத் தீர்மானமாகச் சொல்ல முடியும். அன்பு - அறிவு இரட்டையர் அமைத்து உள்ள சண்டை காட்சிகள் எனக்கு மிகப் பெரிய ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்து ஹீரோ தரும் என்பதும் உத்திரவாதம்.
இந்தப் படத்தில் எனக்கு இணையாக நடித்துள்ள ஆனந்தி ஒரு ராசியான வெற்றிப் பட நாயகி ...

