32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

பண்டிகை மகிழ்ச்சியில் கிருஷ்ணா

Dinesh R சேலம் Published: 11/07/2017 2 நிமிட வாசிப்பு Updated: 12/07/2017 சினிமா
எழுத்து அளவு:

Krishna confident about his movie Pandigai

கிருஷ்ணா நடிப்பில், அறிமுக இயக்குநர் பெரோஸ் இயக்கத்தில், வருகின்ற 14 ஆம் தேதி வெளி வரவுள்ள படம் பண்டிகை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கழுகு, யாமிருக்க பயமே போன்ற படங்கள் படம் வெளி வருவதற்கு முன்பு எனக்கு என்ன உணர்வைத் தந்ததோ, அதே உணர்வைப் பண்டிகை படமும் தருகிறது. இயக்குநர் பெரோஸ் எனக்கு நீண்ட கால நண்பர். எங்களுக்குள் உள்ள பரஸ்பர தோழமையும், புரிதலும் இந்தப் படத்தில் தெளிவாகத் தெரியும். ஒவ்வொரு விஷயத்திலும் அவர் காட்டும் கவனம், அவரது இலக்கு வெற்றி மட்டுமே என்பதைச் சொல்லும்.

சில உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் கோர்க்கப் பட்ட இந்தக் கதை என் திரை வாழ்வில் முக்கிய படமாக இருக்கும் என்பதைத் தீர்மானமாகச் சொல்ல முடியும். அன்பு – அறிவு இரட்டையர் அமைத்து உள்ள சண்டை காட்சிகள் எனக்கு மிகப் பெரிய ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்து ஹீரோ தரும் என்பதும் உத்திரவாதம்.

இந்தப் படத்தில் எனக்கு இணையாக நடித்துள்ள ஆனந்தி ஒரு ராசியான வெற்றிப் பட நாயகி என்பது தெரியும். பண்டிகை, மேலும் ஒரு வெற்றியை அவருக்குத் தரும். ‘சித்தப்பு’ சரவணன் இந்தப் படத்துக்கு பிறகு தமிழ்த் திரை உலகில் குணச்சித்திர நடிகர்களுக்கு இருக்கும் பஞ்சத்தைத் தீர்ப்பார் என்பது உறுதி. அவரைப் போலவே நிதின் சத்யாவும், தனக்கென ஓரிடத்தை இந்தப் படம் மூலம் நிச்சயம் நிர்ணயித்துக் கொள்வார்.

இசையமைப்பாளர் R.H.விக்ரம் பாடல்களில் மட்டுமின்றி, பின்னணி இசையிலும் தனது திறமையை வெளில்காட்டி இருக்கிறார். ஒளிப்பதிவாளர் அரவிந்தும், படத்தொகுப்பாளர் பிரபகாரும் படத்தின் உச்சக் கட்ட வேகத்துக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.

படத்தின் தயாரிப்பாளர் விஜயலட்சுமி என்னுடைய நெருங்கிய தோழி. தயாரிப்பாளர் என்ற ஸ்தானத்தையும் தாண்டி அவர் இந்தப் படத்துக்காக எடுத்துக் கொண்ட சிரத்தை , அவரது வெற்றிக்குக் கட்டியம் கூறுகிறது. படத்தை வாங்கி வெளியிடும் Auraa சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜுக்குத் தொட்டதெல்லாம் பொன்னாக்கும் ராசி இருக்கிறது. எங்கள் அனைவரது உழைப்பும் பண்டிகை படத்தின் வெற்றி மூலம் கொண்டாடப்படும் என்பது நிச்சயம்” என்று கொண்டாட்டமாக கூறுகிறார் கிருஷ்ணா.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.