ஐங்கரன் விமர்சனம்
நாடு நலம்பெற எதையாவது சாதிக்க வேண்டும் என்று முயற்சி செய்யும் இளைஞர்களைத் தட்டிக் கொடுத்து வளர்க்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது ஐங்கரன் திரைப்படம்.
2015 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, பல்வேறு பிரச்சனைகளைக் கடந்து தற்போது படம் திரைகாணுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் என்ஜினியரீங் மாணவரான ஜீ.வி.பிரகாஷ், மக்களுக்குத் தேவையானதை விஞ்ஞான ரீதியாக பயன்படும் வகையில் சின்ன சின்னதாகச் சாதனங்களைச் செய்கிறார். அதற்கான அங்கீகாரத்திற்கு அலையோ அலை என அலைகிறார். ஆனால் அவமதிக்கப்படுகிறார். ஒரு கட்டத்தில் சோர்வான ஜீவிக்கு மிக முக்கியமான வாய்ப்பு ஓர் உணர்ச்சிகரமான சம்பவம் மூலமாக வருகிறது. அதைத் தக்கவைத்துக் கொண்டாரா என்ற கேள்விக்கான பதிலைச் சுவாரசியமாக திரையில் காணலாம். இந்த விஞ்ஞான என்ஜினியர் நாயகனையும், வடநாட்டுக் கொள்ளை லீடராக வரும் சித்தார்த் சங்கரையும், அவரது குழுவையும் ஒரு பிரச்சனையோடு இணைத்த விதம் சிறப்...