Shadow

Tag: Al Qebla Al Watya Oil Refinery and Petrochemical Firm

தூத்துக்குடியில் 49000 கோடி முதலீடு – அல் க்யுப்லா அல் வாடயா நிறுவனம்

தூத்துக்குடியில் 49000 கோடி முதலீடு – அல் க்யுப்லா அல் வாடயா நிறுவனம்

சமூகம்
சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த மாதம் 20ஆம் தேதி, தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்  நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. குறிப்பாகத் தென்மாவட்டங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் நிறுவனங்கள் மூலம் முதலீடுகளை அதிகரிக்கவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தூத்துக்குடியில்  ரூ. 49,000 கோடி முதலீட்டில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க குவைத் நாட்டில் செயல்பட்டுவரும் அல் க்யுப்லா அல் வட்யா என்ற நிறுவனத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இந்நிலையில், தூத்துக்குடியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும் முதலீடு செய்யவும் அனுமதி வழங்கிய தமிழக அரசிற்கு அல் க்யுப்லா அல் வட்யா நிறுவனத்தல...