ஏலியன்ஸ் 2042 விமர்சனம்
பூமியைத் தாக்கி, அழித்து, தண்ணீரை உறிஞ்சும் ஆக்ரோஷமான பவர் ஃபுல்லான வேற்றுக்கிரகவாசிகளிடம் இருந்து பூமியைக் காப்பாற்றுகிறது சீனப்படை. எத்தனை வருடம்தான் அமெரிக்கர்களே உலகைக் காப்பாற்றுவார்கள்?
‘ஏலியன்’ எனும் படத்தை 1979இல் ரிட்லி ஸ்காட் இயக்கியிருந்தார். அதன் அடுத்த பாகத்தை, அவதார் படப்புகழ் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் 1986 இல் ‘ஏலியன்ஸ்’ என்ற படத்தை எடுத்திருந்தார். ‘ஏலியன்ஸ் 3 (1992)’, ‘ஏலியன் ரீசரக்ஷன் (1997)’, ‘ப்ரோமிதியஸ் (2012)’, ‘ஏலியன் கோவெனன்ட் (2017)’ என படங்கள் வந்தன. அதில்லாமல், ‘ஏலியன் Vs பிரிடேட்டேர் (2004)’, ‘ஏலியன்ஸ் Vs பிரிடேட்டேர்: ரெக்வியம் (2007)’ என ஏலியன்ஸ்களை முன்னிலைப்படுத்தி மேலும் ஒரு தொடர் உருவானது.
நானூறு கோடி ரூபாயில் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். எத்தனை முறை சுட்டாலும், இறக்காதவைகள். மூளையே தலையாக, அதில் ஏகத்திற்குக் கண்களும், வாயும் உடைய வினோதமான ஜந்துக்கள...