பார்டர் – அருண்விஜயின் ஆக்ஷன் த்ரில்லர்
நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் தேசபக்தி கொண்ட ஆக்ஷன் என்டர்டெய்ன்மென்ட் திரைப்படம் 'அருண்விஜய்யின் பார்டர்'. ஆல் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்திருக்கின்றன. இதனைத் தொடர்ந்து விரைவில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியலில் ‘அருண்விஜய்யின் பார்டர்’ திரைப்படமும் இணைகிறது.
ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் கதையையும், கதாபாத்திரத்தையும் தேர்வு செய்து நடித்து வரும் முன்னணி நடிகர்களில் நடிகர் அருண் விஜயும் ஒருவர். 'அருண்விஜய்யின் பார்டர்' படத்திலும் துணிச்சல் மிக்க கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் புலனாய்வுத் துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்காக அவர் கடுமையாக உழைத்து, ஒத்திகை...