32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

பார்டர் – அருண்விஜயின் ஆக்ஷன் த்ரில்லர்

Dinesh R சேலம் Published: 12/09/2021 2 நிமிட வாசிப்பு Updated: 30/11/2021 சினிமா
எழுத்து அளவு:

Arun Vijay In borrder

நடிகர் அருண் விஜய் நடிப்பில் தயாராகி வரும் தேசபக்தி கொண்ட ஆக்ஷன் என்டர்டெய்ன்மென்ட் திரைப்படம் ‘அருண்விஜய்யின் பார்டர்’. ஆல் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்திருக்கிறார். இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்திருக்கின்றன. இதனைத் தொடர்ந்து விரைவில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியலில் ‘அருண்விஜய்யின் பார்டர்’ திரைப்படமும் இணைகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் கதையையும், கதாபாத்திரத்தையும் தேர்வு செய்து நடித்து வரும் முன்னணி நடிகர்களில் நடிகர் அருண் விஜயும் ஒருவர். ‘அருண்விஜய்யின் பார்டர்’ படத்திலும் துணிச்சல் மிக்க கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் புலனாய்வுத் துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்காக அவர் கடுமையாக உழைத்து, ஒத்திகையும் பயிற்சியும் செய்து சண்டைக்காட்சிகளில் நடித்து அசத்தியிருக்கிறார். அதிலும் கொரோனா தொற்று பரவல் இருந்த காலகட்டத்தில், படத்தின் பணிகளை நிறைவு செய்வதற்காகப் படக்குழுவினருக்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்திருக்கிறார். குறிப்பாக டெல்லி, ஆக்ரா மற்றும் அஜ்மீர் ஆகிய நகரங்களின் வீதிகளில் நடைபெற்ற படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு முழுமையான ஒத்துழைப்பை அளித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் அறிமுக நடிகை ஸ்டெஃபி பட்டேல், நாயகன் அருண் விஜயின் ஜோடியாக நடித்திருக்கிறார். நடிகை ரெஜினா கசாண்ட்ரா, இப்படத்தில் நாயகன் அருண் விஜயுடன் பணியாற்றும் புலனாய்வுத் துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவரும் சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறார். இதற்காக சிறப்புப் பயிற்சியும் பெற்றார். பக்ஸ் என்ற பகவதி பெருமாளும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.