மயில்சாமியின் மகன் அன்பு நடிக்கும் ‘அல்டி’
அல்டி திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்ச்சியில் பேசிய ராதா ரவி, "சினிமா என்றாலே பரபரப்பாக இருப்பது ஒரு காலம் தான். அப்படிப் பரபரப்பாக இருக்கக்கூடிய காலத்திலும் படம் துவங்கியது முதல் இன்று வரை ஆதரவு அளித்திருக்கிறார். இன்று நேரில் வந்து வாழ்த்தும் உயர்ந்த உள்ளம் கொண்ட விஜய்சேதுபதியைப் பாராட்டுகிறேன்.
சினிமா இப்போது சிரமத்தில் இருக்கிறது. பார்த்திபன் நடித்த ஒத்த செருப்பு படத்தை திரையரங்கிற்குச் சென்று பார்த்தேன். கைபேசியில் அழைத்து வாழ்த்தினேன். திரையரங்கில் கூட்டம் வந்தாலும் மறுநாளே எடுக்கச் சொல்லிவிட்டார்கள். அதனை நினைத்து பார்த்திபன் மிகுந்த வேதனையடைந்தார். பார்க்க பார்க்க தான் மக்களுக்கு படம் பிடிக்கும். உடனே, தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்று இன்னும் நீடிக்கச் செய்ய வேண்டுமென்று கூறி வந்தேன்.
சிறு படங்களுக்கு குறைந்தது 5 நாட்களாக திரையரங்கி...