Shadow

Tag: Ameera movie

“அமீரா: இஸ்லாமியப் பெண்ணின் கதை” – சீமான்

“அமீரா: இஸ்லாமியப் பெண்ணின் கதை” – சீமான்

சினிமா, திரைச் செய்தி
தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்தப் படத்தில், பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். சீமானிடம் உதவியாளராகப் பணியாற்றிய ரா.சுப்ரமணியன் என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் பல சர்வதேச விருதுகளை குவித்த டுலெட் படத்தின் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான செழியன் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பூஜை 22-02-2019 அன்று ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் னாம் தமிழர் கட்சியின் தலைவரும் இயக்குனரும் நடிகருமான செந்தமிழன் சீமான், ஆர்.கே.சுரேஷ், அனு சித்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். படம் பற்றி நடிகர் ஆர்.கே....
“சினிமா: ஒரு துப்பாக்கி, ஒரு கோடாரி, ஒரு அரிவாள்” – சீமான்

“சினிமா: ஒரு துப்பாக்கி, ஒரு கோடாரி, ஒரு அரிவாள்” – சீமான்

சினிமா, திரைச் செய்தி
"அரசியலைக் கவனிக்காமல் அதுவும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் படத்தில் நாட்களைச் செலவிடுகிறீர்களே என்கிறார்கள். எனக்கு இருபது நாள்தான் படப்பிடிப்பு இருக்கிறது. மற்றவர்கள் கூட்டணி அமைக்க நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அந்த நேரம் எனக்கு மிச்சம் என்பதால் அதை நான் படப்பிடிப்பிற்குச் செலவிடுகிறேன். அவ்வளவுதான்! நடிகர்கள் நாடாளக்கூடாது என்று சொல்லும் சீமான், திரைத்துறையில் இருந்துதானே வந்திருக்கிறார் என பலரும் கேட்கிறார்கள். நான் எனது ரசிகர்களைச் சந்தித்து, அவர்களை தொண்டர்களாக மாற்றிக் கட்சியைத் துவங்கவில்லை. என்னுடைய பிறப்பு, வளர்ப்பு, பாதை, பயணம் எல்லாமே வேறு. கமல், ரஜினி இவர்களெல்லாம் திரைப்படத்துறையில் இருந்து வருகிறார்கள். திமுக, அதிமுக ஊழல் கட்சி என்பது இப்போதுதான் இவர்களுக்குத் தெரிந்ததா? இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? ரஜினிகாந்த்திடம் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களை ஏன் ...