Shadow

Tag: Apocalyptic thriller

கலியுகம் – போஸ்ட் அபோகலிப்டிக் த்ரில்லர்

கலியுகம் – போஸ்ட் அபோகலிப்டிக் த்ரில்லர்

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
ஷ்ரத்தா ஸ்ரீநாதும் கிஷோரும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'கலியுகம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. பிரைம் சினிமாஸ் எனும் நிறுவனத்தின் உரிமையாளரான கே.எஸ்.ராமகிருஷ்ணா, ஆர்.கே. இன்டர்நேஷனல் இன்கார்ப்பரேட் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கலியுகம்'. இதனை இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கியிருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் 'விக்ரம் வேதா', 'நேர்கொண்ட பார்வை', 'விட்னஸ்' ஆகிய திரைப்படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் நடிகர் கிஷோர் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கிறார். கே. ராம்சரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு டான் வின்சென்ட் இசை மற்றும் ஒலி வடிவமைப்பு பணியை ஏற்றிருக்கிறார். சக்தி வெங்கட்ராஜ் கலை இயக்கத்தைக் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை நிம்ஸ் மேற்கொண்டிருக்...