Shadow

Tag: Appa vimarsanam

அப்பா விமர்சனம்

அப்பா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அரசுப் பள்ளிகளின் மீது வீசிய சாட்டையை, அதனினும் வலுவாகத் தனியார் பள்ளிகளின் மீது வீசியுள்ளார் தயாளன். ஒரு லட்சிய தந்தைக்கு எடுத்துக்காட்டாக தயாளன் எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார் படத்தைத் தயாரித்து இயக்கியுள்ள சமுத்திரக்கனி. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்தும், 'நாம் இணைந்து நம் மகனை உயர்த்துவோம்' எனக் குழந்தையின் தொப்புள் கொடி மேல் எல்லாம் சபதம் எடுத்தும் கிலியைக் கிளப்புகிறார். பார்வையாளர்களுக்குப் பாடமெடுத்துப் புத்தி புகட்டுவது, நன்னெறியை எடுத்தியம்புவது என்ற அவரது அக்கறை உடல் மொழியிலும், வசன உச்சரிப்பிலும் துருத்திக் கொண்டே இருக்கிறது. ஆனால், சில பாடங்களை இப்படி நேரடியாகச் சொன்னால்தான், சிலரையேணும் அது போய்ச் சேரும். பெற்றோர்களின் மனதில் எங்குப் பதியாமல் போய் விடுமோ என, சசிகுமாரை வைத்தும் ஒருமுறை ரிவிஷன் செய்து விடுகிறார் சமுத்திரக்கனி. ‘சின...