Shadow

Tag: Arun Mijo

கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ‘பெண் உறுப்பு’ குறும்படம்

கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ‘பெண் உறுப்பு’ குறும்படம்

Short Film, காணொளிகள்
டீடோட்டேலர் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இணையதளத்தில் வெளியாகியுள்ள குறும்படம் "பெண் உறுப்பு". அருண் மிஜோ எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் பூஜா ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கே.ஆர்.வினோத் நடித்துள்ளார். பெண்களுக்கான சமூகக் கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தக் குறும்படத்தை நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்து வரும் நிலையில் இந்தப் படம் ஒரு விழிப்புணர்வாக கருதப்படுகிறது. இந்தப் படத்தின் முதல் பார்வையை அறம் பட இயக்குநர் கோபி நாயனார் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.அலைபாயும் மனிதனின் மனதைப் படிப்பது என்பது மிகக் கொடிய சாபம். அந்த சாபத்திற்கு விமோசனமே இல்லை. பெண்களைப் போகப்பொருளாகப் பார்ப்பதைப் போலவே, புனிதப்படுத்திவிடுவதும் பிற்போக்குத்தனமானது. கண்ணியம் காத்தலையும், பெண்ணியம...