
“DNA என்றால் திவ்யா & ஆனந்த்” – அதர்வா
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'டிஎன்ஏ (DNA)’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய நடிகர் அதர்வா, ''கடந்த தசாப்தத்தில் வெளியான சிறந்த படங்களில் பரியேறும் பெருமாள் ஒன்று. இந்தப் படத்தின் வாய்ப்பைத் தவறவிட்டதால் எதையும் இழக்கவில்லை என நினைக்கிறேன். ஏனெனில் கதிர் மிக அற்புதமாக நடித்திருந்தார். மாரி செல்வராஜிடம் வேறு ஏதேனும் கதை இருந்தால் அதில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
டிஎன்ஏ படத்தின் கதையை இயக்குநர் நெல்சன் சொல்வதற்கு முன் தயாரிப்பாளர் அம்பேத்குமார் சார் ஃபோனில் சொல்லிவிட்டார். ஆனால் அப்போது படத்தின் டைட்டில் என்ன என்று கேட்கவில்லை. இயக்குநர் நெல்சன...


