
அதிரசம்
வணக்கம்,அதிரசம் இல்லாத தீபாவளியா???? அரிசிமாவையும், வெல்லப்பாகையும் பக்குவமா கலக்கி, நல்லா புளிக்கவிட்டு, பொரிச்சு எடுத்தா... மெது மெதுன்னு அதிரசம், சும்மா வாயில் உருகும்... எங்க ஊர் பக்கம்,, தட்டு கச்சாயம்னும் சொல்வோம். எவ்வளவுதான் புது புது இனிப்பு வகைகள் வந்தாலும், நம்ம பழமையான , இனிப்புகளுக்கு எப்பவும் மவுசு குறைஞ்சதே இல்லீங்க.. தேவையான பொருட்கள்:பச்சரிசி - 1 கிலோ (2 கப் மாவு தனியாக எடுத்து வைக்கவும்)
வெல்லம் / நாட்டு சக்கரை - 3/4 கிலோ
நெய்- 2 ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க செய்முறை:step 1: பச்சரிசியை நல்லா ஒரு 3-4 மணி நேரம் ஊற வச்சுக்கோங்க. பிறகு, எடுத்து வடிகட்டி, தண்ணி இறங்கற துணியை காரையிலோ இல்லை கயிற்று கட்டலிலோ விரித்து போட்டு இந்த அரிசியை போடுங்க. ஒரு 10-15 நிமிஷத்தில், நல்லா தண்ணியெல்லாம் வடிஞ்சிருக்கும். அரிசியை அள்ளி ப...