பயம் ஒரு பயணம் விமர்சனம்
பேய்ப் படங்கள், காமெடிப் படங்களாக மாறி மிகுந்து விட்ட சூழலில் முழு நீள ‘சீரியஸ்’ பேய்ப் படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் மணிஷர்மா.
தன்னைக் கொன்றவர்களைப் பட்டெனக் கொன்றுவிடும் பேய், நாயகனை மட்டும் பயமுறுத்தி ஓட விட்டுக் கொண்டே இருக்கிறது. அந்தப் பேய் ஏன், எதற்கு அப்படிச் செய்கிறது என்றும், நாயகனின் நிலை என்னானது என்பதும்தான் படத்தின் கதை.
பரத் ரெட்டி முதல் முறையாக நாயகனாக நடித்துள்ளார். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் ஓடிக் கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தை நிறைவாகச் செய்துள்ளார். மகளின் அன்பையும், மகள் மீது அன்பு செலுத்துவதைப் பெரும்பேறாகக் கருதும் பாசமுள்ள தந்தையாகவும் உலா வந்துள்ளார் பரத். படத்தின் மையக்கருவே, மகள் மீது தந்தை கொண்ட அன்புதான் என்றும் சொல்லலாம். தந்தை மகள் மீது காட்டும் பாசம், படத்தில் வரும் கிளைக்கதையிலும் மையக்கருவாக வருகிறது. விஷாகா சிங்கின் தந்தையாக நடித்...