Shadow

Tag: Bigg Boss Seran

பிக் பாஸ் 3: நாள் 41 – “உரிமை எடுத்துக் கொள்ளக்கூடியதல்ல; பெறப்படுவது” – கமல்

பிக் பாஸ் 3: நாள் 41 – “உரிமை எடுத்துக் கொள்ளக்கூடியதல்ல; பெறப்படுவது” – கமல்

பிக் பாஸ்
மீசையை எடுத்துவிட்டு மைக்கேல் மதன காமராஜன் காலத்து கமலாக வந்து நின்றார். இரண்டு பட வேலைகள், அரசியல் கட்சி என எவ்வளவு பிரஷர் இருக்கும். ஆனால் ஏற்றுக் கொண்ட வேலையை ரசித்துச் செய்தோம் என்றால் எப்படி ரிசல்ட் இருக்கும் என்பதற்கு கமல் ஒரு உதாரணம். பம்மல் கே.சம்பந்தம் படத்தில் ஒரு காமெடி சீன் இருக்கும். ‘அறிந்தது, அறியாதது, தெரிந்தது தெரியாதது எல்லாம் எமனுக்குத் தெரியும்’ என கமல் டயலாக் பேசவேண்டும். சரியாகச் சொல்லாமல் இயக்குநரிடம் திட்டு வாங்குவார். அப்பொழுது காரணம் சொல்லுவார் – ‘கழுத்துல பாம்பு ஊறுது, கைல இருக்க பம்புல இருந்து தண்ணி வரணும், மாடு வேற மிரளாம பார்த்துக்கணும், டயலாக்கும் சொல்லணும்னா எப்படி சார்?’ ஒரே நேரத்துல பல வேலைகள் செய்யும் போது அந்த வேலையின் தரத்தில் நாம் சமரசம் பண்ணிக் கொள்வோம். கேட்டாலும், “ஒரே நேரத்தில் இத்தனை வேலை செய்து பார்த்தால் தெரியும் உனக்கு” என வியாக்கானம் பேசுவோம...
பிக் பாஸ் 3: நாள் 40 – “லூசு மாதிரி பேசாதய்யா!” – சீறிய சரவணன்

பிக் பாஸ் 3: நாள் 40 – “லூசு மாதிரி பேசாதய்யா!” – சீறிய சரவணன்

பிக் பாஸ்
மாரி பாடலுடன் தொடங்கிய நாளில் எப்போதும் இல்லாத வகையில் ஆண்கள் எல்லோரும் சேர்ந்து குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தனர். நாள் ஆரம்பமே இந்த வார டாஸ்க்கில் பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ் தேர்ந்தெடுப்பதற்கான வேலை ஆரம்பித்தது. எப்பவும் போல் இந்த வார பெஸ்ட் பெர்ஃபாமர் என வரும்போது சாண்டி, மது இரண்டு பேரும் போட்டியே இல்லாமல் செலக்ட் ஆகினர். வாரம் முழுவதும் பெஸ்ட் பெர்ஃபாமருக்கு முகின் பேரைச் சொன்ன உடனே யாரும் எதுவும் பேசவில்லை. அடுத்து வொர்ஸ்ட் பெர்ஃபாமர் யாரென வரும் போது தான் பிரச்சினை ஆரம்பித்தது. எடுத்த உடனே சாண்டி, ‘சேரன் ரஜினி கேரக்டரில் இன்னும் கொஞ்சம் நல்லா பண்பிருக்கலாம்’ எனச் சொன்ன உடனே ஜெர்க் ஆனார் சேரன். இந்த இடத்தில் சிலதைப் பார்க்கலாம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த நிகழ்வு நடக்கும் போதெல்லாம், ஹவுஸ்மேட்ஸ் எல்லாரும் கருத்து சொல்லுவதில்லை. யாராவது ஒருத்தர் ஒரு பேரைச் சொன்னால், அதைக் கூட ஆதரித...